தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து
பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு


ரயில் விபத்து நடந்த பகுதியில் கூடியிருக்கும் மக்கள்



   
அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசாரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியது. இந்திய விபத்தில் 60பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று தசாரா பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் ராவணன் உருவபொம்மை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டாளம் செல்கிறது.
   இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தை மறித்தும் ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது.
 பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. அப்போதுவேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.
அப்போது தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு, உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மீட்புப்பணியில்ஈடுபட்டுள்ளனர். ஆனால், எத்தனைப் பேர் பலியானார்கள், காயமடைந்தனர் என்ற முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
 அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.
இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top