தென்கிழக்கு
பல்கலைக்கழக மாணவர்கள்
முன்னெடுத்து
வந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக
நீர்தாரை
பிரயோகம்
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக
மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டத்தை
கலைப்பதற்காக பொலிஸார் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல்
ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு
விதிக்கப்பட்டுள்ள வகுப்பு தடை மற்றும் மேலும் சில மாணவர்களின் மாணவர் தகுதியை
இரத்து செய்தமைக்கும் எதிராக இவ்வாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment