ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள்
70 பேர் வைத்தியசாலையில்

கொட்டகலை, பத்தனை, ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் அருந்திய உணவு விசமடைந்தமை காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பரிமாறப்பட்ட உணவு நஞ்சடைந்தமை காரணமாக, அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதுள்ளது.
இதனையடுத்து அவர்கள் இன்று (23) காலை 8.00 மணியளவில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமைக் காரணமாக, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும், இதில் 48 மாணவிகள் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top