‘2019 ஆம்
ஆண்டு முதல் வத்தளையில் தமிழ் பாடசாலை’
தீர்வு
கிடைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பதிவு
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வத்தளை தமிழ் பாடசாலைக்கு தீர்வு
கிடைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
வத்தளையில் ஒரு தேசிய தமிழ் பாடசாலை உருவாக்க வேண்டும் என, தான் முன்வைத்த
அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சரின் ஆதரவுடன், அமைச்சரவை சற்று முன்னர்
ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.
இதன்படி கல்வி அமைச்சு இந்த பாடசாலையை, ஐனவரி 2019 முதல் கொண்டு
நடாத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பு: முஸ்லிம் அரசியல்வாதிகளே! கொலன்னாவ பிரதேசத்தில் ஒரு முஸ்லிம்
பாடசாலை அமைக்கப்படல் வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இன்னும் தோன்றவில்லையா? - இது மக்கள் விருப்பம்
51 mins ·
<அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம்>
வத்தளையில் தமிழ் பாடசாலை என்ற நீண்டகால
இழுபறிக்கு ஒரு தீர்வாக, வத்தளையில் ஒரு 'தேசிய"
தமிழ் பாடசாலை உருவாக்க வேண்டும் என, நான் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தை கல்வி
அமைச்சரின் ஆதரவுடன், அமைச்சரவை சற்று முன்னர் ஏகமனதாக
ஏற்றுக்கொண்டது.
கொடைவள்ளல்
மாணிக்கவாசகம் தனது மைந்தன் அருண் பிரசாந்த் பெயரில் வழங்கிய காணியிலும், கட்டிடத்திலும்
கல்வி அமைச்சு இந்த பாடசாலையை, ஐனவரி 2019 முதல் கொண்டு நடத்தும்.
0 comments:
Post a Comment