அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு
மேலும் 926 பேர் நியமனம்
நாளை அலரிமாளிகையில் வைபவம்
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் தொள்ளாயிரத்து 26 பேரைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர் தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறும்.
அரச நிர்வாக அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த மே மாதத்திலும் அரச முகாமைத்துவ உதவியாளர்களாக நான்காயிரத்து 500 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment