மெளலவி ஏ.ஏ.றஸ்ஸாக் (பாரி) அவர்கள் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்



சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் தலைவராகக் கடமையாற்றிய மெளலவி ஏ.ஏ.றஸ்ஸாக் (பாரி) அவர்கள் தனது 83வது வயதில் இன்று 2018.10.02 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை காலமானார். இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் கதீபாகக் கடமையாற்றிய புலவர் ஆலிம் என அழைக்கப்பட்ட ஆதம்லெவ்வை ஆலிம் தம்பதியினரின் புதல்வராக 1936.02.18 ஆம் திகதி மெளலவி ஏ.ஏ.றஸ்ஸாக் அவர்கள் பிறந்தார்கள்.
இவர் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் கதீபாக, இமாமாக, “மாந்தறா“ குடி மரைக்காயராக, பள்ளிவாசல் பரிபாலனசபை உறுப்பினராக, உப தலைவராக, (2007.08.19 தொடக்கம் 2008.01.15 வரை) பள்ளிவாசல் தலைவராக சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா தலைவராக சிறப்பாக பணிபுரிந்தவர்.
தனது மார்க்க கல்வியை காலி மக்கிய்யா அரபுக் கல்லூரியில் பெற்றுக்கொண்ட மெளலவி ஏ.ஏ.றஸ்ஸாக் (பாரி) அவர்கள் தனது மெளலவி தராதரத்தை வெலிகம பாரி அரபுக்கல்லூரியில் பெற்றுக்கொண்டார்.
1960 ஆம் ஆண்டில் மன்னார் வேப்பங்குளம் அரசினர் பாடசாலைக்கு முதல் நியமனம் பெற்றுக்கொண்ட மெளலவி ஏ.ஏ.றஸ்ஸாக் (பாரி) அவர்கள் 1962 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு  இடம் மாற்றம் பெற்று வந்தார். சிறப்பாகப் பணிபுரிந்த இவர் 1992 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் பணியாற்றிய போது ஓய்வு பெற்றார்.
அன்னாரின் மறுமை வாழ்வு நன்றாக அமைய பிராத்திப்போம். ஆமீன்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top