கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதி
கொழும்பு
நகரின் பிரதான
வீதியொன்று திடீரென தாழிறங்கியுள்ளது.
நாரஹென்பிட்டி
சித்ரா லேன்
பகுதியிலேயே இவ்வாறு நிலம் திடீரென தாழிறங்கியுள்ளதாக
குறிப்பிடப்படுகின்றது.
இதனால்
வாகனம் ஒன்று
விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலை
மாணவர்களை ஏற்றிச்
சென்ற வேன்
ஒன்றே இவ்வாறு
விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில்
ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
குறித்த
வேனை அவ்விடத்தில்
இருந்து அகற்றுவதற்கு
பொலிஸார் நடவடிக்கை
மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும்
குறித்த பாதை
ஊடாக பயணிப்பவர்களை
வேறு வீதியை
பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டு கொண்டுள்ளனர்.


0 comments:
Post a Comment