நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு



எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்தப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விலையேற்றம் புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 149 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெற்றோல் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டென் 92 பெற்றோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 169 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுப்பர் டீசலின் புதிய விலை  141 ரூபாவாகும். இதற்கமைய ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை
தற்போதை விலை
திருத்தப்பட்ட விலை   லீற்றர் (ரூபாய்)
அதிகரிப்பு லீற்றர் (ரூபாய்)
ஒட்டோ டீசல்
123
123
அதிகரிக்கப்படவில்லை
ஒக்டென் 92 பெற்றோல்
149
155
06
ஒக்டென் 95 பெற்றோல்
161
169
08
சுப்பர் டீசல்
133
141
08



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top