இந்திய பிரதமர் இலங்கைப் பிரதமருக்கு
காண்பித்த காணொளி!



இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஒன்றை காட்டியுள்ளார்.
தேசபிதா மகாத்மா காந்திக்கு இலங்கையில் வழங்கப்பட்ட கௌரம் தொடர்பான காணொளி ஒன்றையே பிரதமர் காண்பித்துள்ளார்.
இலங்கையின் இளம் பாடகர்களான பாத்திய ஜயகொடி, சந்தோஷ் வீரமன் மற்றும் உமாரியா சிங்கவன்ஷவினால் மகாத்மா காந்திக்காக கௌவர பாடல் ஒன்று தயாரித்து வெளியிடப்பட்டது.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டுவைஷ்னவ் ஜன தோஎன்ற பாடல் தயாரித்து பாடப்பட்டது.
இந்த பாடல் காணொளியை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கையடக்க தொலைபேசியில் காண்பித்து மகிழ்ந்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top