அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால்
நீர் கட்டணங்களை உயர்த்தும் கோரிக்கை நிராகரிப்பு
இந்த யோசனைக்கு அமைச்சர்களான ரிசாத் பதியுதீன்,
சரத் அமுனுகம கடும் எதிர்ப்பு
நீர்க்
கட்டணங்களை உயர்த்தும் கோரிக்கை அமைச்சரவையில் நேற்றைய
அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நகர
திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சர்
ரவூப் ஹக்கீம்,
நீர்க் கட்டணங்களை
உயர்த்தும் அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் நேற்று
முன்வைத்துள்ளார்.
எவ்வாறெனினும்,
இந்த அமைச்சரவை
பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நீர்க்
கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்துவது குறித்து இந்த
அமைச்சரவை பத்திரம்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும்
இந்த யோசனைக்கு
அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், சரத் அமுனுகம
கடும் எதிர்ப்பை
வெளியிட்டுள்ளார்கள்.
இதேவேளை,
கட்டணங்களை உயர்த்தமால் இலங்கை நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபையை நடாத்திச் செல்ல முடியாது
என அமைச்சர்
ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நீர்க்
கட்டணங்களை அதிகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்
பொறுப்பினை ஏற்றுக்கொள்ளட்டும் என ஹக்கீம் அதிருப்தி
வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment