சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் கலந்துரையாடல்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளுக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையேயான சந்திப்பு இன்று -
2018.10.18 பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் அவர்கள் தலைமையில், சுகாதார துறை உயர் அதிகாரிகள் மற்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சனுஸ் காரியப்பரின் பங்குபற்றுதலுடன் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க பொதுச் செயலாளர் எம்.ஐ.சதாத் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.ஏ. கபூர் (ஜெமீல்), சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை தலைவர் அஷ்- ஷெய்ஹ் எம்.ஐ.சலீம் (ஷர்க்கி) உட்பட வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின்போது, சாய்ந்தமருது வைத்தியசாலையின் கடந்தகால செயற்பாடுகள், அண்மைக்கால அடைவுகள், எதிர்கால இலக்குகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலைக்குத் தேவையான பௌதீக வளங்கள் மற்றும் ஆணிகளை வழங்குதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இவ்வைத்தியசாலை மிக குறுகிய காலத்தினுள் நோயாளிகள் வரவிலும் பலதரப்பட்ட வைத்திய சிகிச்சைகளை வழங்குவதிலும் சிறப்பாக செயற்பட்டு வருவதையிட்டும் வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களினதும் பல்வேறு பங்களிப்புகளால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதையிட்டு பணிப்பாளர் அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன் வைத்தியசாலை அபிவிருத்தி விடயத்தில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது வைத்தியசாலை துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் இந்நிலையில் வைத்தியசாலை நலன் கருதி பல வேலைப்பழுகளுக்கு மத்தியில் இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் அவர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
-
Muhammadh
Ismaeel Sarjoon

0 comments:
Post a Comment