சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு
நவீன மின் விளக்குகள் அன்பளிப்பு.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வளாகத்தினையும்
கட்டிடடங்ளையும் வெளிச்சமூட்டும் முகமாக வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் விடுத்த
வேண்டுகோளுக்கிணங்க ABS ஸ்மார்ட் மார்க்கட்டிங் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஏ.அஷ்ரப் அலி அவர்கள்
ஒரு தொகுதி நவீன மின்விளக்குகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று 2018.10.18
- வியாழக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சனுஸ்
காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க
ஆலோசனை சபை உறுப்பினர்களான சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபைத் தலைவர் தலைவர்
அஷ்-ஷெய்ஹ். எம்.ஐ. சலீம் (ஷர்க்கி) மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்
ஏ.ஆர்.எம். அஸீம் அத்துடன் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து
கொண்டனர்.
அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மேற்படி
மின்விளக்குகளை அன்பளிப்புச் செய்தமைக்காக ஏ.ஏ.அஷ்ரப் அலி அவர்களுக்கு வைத்தியசாலை
நிருவாகம் மற்றும் அபிவிருத்திச் சங்கம் என்பன நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கின்றன.
Muhammadh Ismaeel Sarjoon

0 comments:
Post a Comment