மகளின் புகைப்படத்தை
முதல் முறையாக வெளியிட்ட
நடிகை அசின்
நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார். ஏரின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள மகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அசின், தமிழ் சினிமாக்களில் நடித்து பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கே பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்குக் கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்ததாக செய்திகள் வெளியாகின.
தனது குழந்தை தொடர்பான புகைப்படத்தையோ பெயரையோ இதுவரை வெளியிடாமல் இருந்தார் அசின். இந்நிலையில் மகளின் முதலாமாண்டு பிறந்தநாள் விழாப் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏரின் குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் சர்மா ''ஏன் நேரம் இத்தனை வேகமாகப் பறக்கிறது? ஏன் இத்தனை சீக்கிரம் நீ வளர வேண்டும்?'' என்று கூறி, ஏரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
More
A year ago we welcomed a Gorgeous, bright
eyed, little angel into this world. She just turned ONE!!! Where does time fly?
Happy Birthday ARIN, my daughter! Why do u have to grow up so fast? Happy 1st
Birthday!
0 comments:
Post a Comment