எம்.. அப்துல் ஜப்பார் அவர்களின்
கல்விச் சேவையும்
பொதுச் சேவையும்




ஓய்வு பெற்ற கவிப் பணிப்பாளர் முஹம்மது இப்றாலெவ்வை அப்துல் ஜப்பார் அவர்கள் தனது 45 வருட காலத்தில் கல்விச் சேவைக்கும்  பொதுச் சேவைக்கும் அளப்பெரிய பங்காற்றியிருக்கின்றார்.
இவர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் பிரதி அதிபராக இருந்த போது ஸாஹிறாக் கல்லூரியை தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்த S.D.S + O.B.A இணைந்த குழு ஒன்று உருவாக்கப்பட்டு அக் குழுவுவின் பொதுச் செயலாளராக இவரைத் தெரிவு செய்தனர்.
எம்.ஐ. அப்துல் ஜப்பார் அவர்களைச் செயலாளராகக் கொண்ட S.D.S + O.B.A இணைந்த குழு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இக் கல்லூரி தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. இது ஏ.எம்.ஹுஸைன் அவர்கள் அதிபராக இருந்த காலமாகும்.
இவர், கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வளவில் அமைந்துள்ள விடுதிக் கட்டடத்தை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் மூலமாக அன்று கல்லூரியின் அதிபராக இருந்த ஏ.எம்.ஹுஸைன் அவர்களோடு இணைந்து செயற்பட்டார்.
கல்முனை ஸாஹிறாக் தேசியப் பாடசாலையில் இவர், பிரதி அதிபராக 1989,1990,1991,1992,1993,1994 ஆண்டுகளில் பிரதி அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.
கல்/ மல்ஹறூஸ் ஸம்ஸ் வித்தியாலய அதிபராக இவர், 1994 ஆம் ஆண்டில் கடமை ஏற்றபோது சுமார் 43 வருடத்தின் பின் அப்பாடசாலை 1”C“ பாடசாலையாக (மஹாவித்தியாலயம்)  மாறியது.
இப்பாட்சாலையில் (1995) க.பொ.த. சாதாரண தரம், க.பொ.த. உயர்தரம் தரம் என்பவை இவர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அப்பாடசாலை சிறப்பாக இயங்கி வருகின்றது.
கல்முனைக் கோட்டப் பாடசாலைகளுடன் இருந்த சாய்ந்தமருதின் ஸாஹிறாக் கல்லூரி உட்பட 7 பாடசாலைகள் பிரிக்கப்பட்டு சாய்ந்தமருதுக்கான தனியான கல்விக் கோட்டம் உருவாக்கப்பட்டது. இது இவரின் பங்களிப்புடன் எடுக்கப்பட்ட ஒரு பாரிய முயற்சியாகும்.
சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் ஸ்தாபக கோட்டக் கல்விப் பணிப்பாளராக இவர் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் கடமை செய்தார்.
இவர்,05 வருடங்கள் பிரதேசக் கல்விப் பணிப்பாளராக சேவை செய்து (2000 – 2007) 2007.07.31 ஆம் ஆண்டில் கடமையிலிருந்து ஓய்வு பெற்றார்.
கல்விச் சேவைகளுக்கு மேலதிகமாக இவர் சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபை பொருளாளராகக் கடமையாற்றி வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பெரும்பாடுபட்டார். இவ் வைத்தியசாலையை  மாவட்ட வைத்தியசாலையாகத் தரம் உயர்த்துவதற்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுப்பதற்கு பெரும் பங்காற்றினார்.
சாய்ந்தமருது வைத்தியசாலையில் வைத்தியசாலை பொறுப்பதிகாரியாகச் செயல்பட்ட  டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களுடன் இணைந்து அவரின் கடமைக்கு உறுதுணையாகச் செயல்பட்டார்.
இதுமாத்திரமல்லாமல், கல்முனை மாநகர சபையுடன் இணைந்துள்ள சாய்ந்தமருது நகரத்தைப் பிரித்து தனியான உள்ளூராட்சி மன்றம் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை முன்வைத்து “சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம்“ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இவர் 10 வருடங்களாகப் பணியாற்றி வருகின்றார்.
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களைத் தலைவராகக் கொண்டு சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தை ஆரம்பித்து தற்போது அந்த ஒன்றியத்தின் செயலாளராக இவர் செயற்படுகின்றார். இந்த ஒன்றியத்தின் மூலமாக பல ஆணைக்குழுக்களுக்கும், திணைக்களங்களுக்கும் இங்குள்ள மக்களின் குறைகள், தேவைகள் குறித்து மகஜர்களை அனுப்பி வைத்துள்ளதுடன் வேண்டுகோள்களும் விடுத்துள்ளார். நேரடியாகத் தோன்றி சாட்சியங்களும் வழங்கியுள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகளுக்கான பல நிகழ்ச்சிகளும் கருத்தரங்குகளும் அடிக்கடி நடாத்துவதற்கு இவர் முன்னின்று உழைத்திருக்கிறார்.
சாய்ந்தமருது பிரதேச அரச ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் இவர் கடந்த 6 வருடங்கள் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றார்.
கல்முனைக் கல்வி மாவட்டத்தில் மருதூர் மஜீத் அவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமை செய்த காலத்தில் கல்முனை மாவட்ட ஆசிரியர்களிடையே நடாத்தப்பட்ட புதுக் கவிதைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றிருந்தார்.
ServiceParticulars&Experience
Post
From
To
Divisional Director of Education
01-06-2002
31-07-2007
Grade1Principal
01-06-1994
31-07-2007
Grade11Principal
01-06-1989
31-05-1994
In Service Advisor (Kalmunai District)
02-12-1986
31-05-1989
Trined Teacher
01-01-1976
01-12-1986
Trainee Teacher
10-05-1974
31-12-1975
Assistant Teacher
01-09-1971
09.05.1974


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top