வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில்
18 மாணவர்கள் பலி
ஜோர்டான் நாட்டில் சம்பவம்

ஜோர்டானில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 18 மாணவர்கள் பலியாகினர்.  35 காயமடைந்தனர் என அறிவிக்கப்படுகின்றது..
இதுகுறித்து  மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில்,
  கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக இஸ்ரேல் - ஜோர்டான் எல்லையோரத்தில் அமைந்துள்ள டெட் சீ ஏரியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு சுற்றுலா வந்த  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டதில் 18 மாணவர்கள் பலியாகினர். 35 காயமடைந்தனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறதுஎன்று கூறப்பட்டுள்ளது.

மீட்பு பணி விரைந்து நடைபெற  இஸ்ரேல் அரசின் உதவியை ஜோர்டான்  கோரி இருப்பதாக இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சார்பில் மீட்புப் பணி வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஜோர்டான்  பிரதமர் ஒமர் ராசஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கடந்த ஏப்ரல் மாதமும் இந்த ஏரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 மாணவர்கள் பலியாகினர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top