"ரம்றக் ஒன்றுடன் ஆட்டோ மோதி விபத்து
நிந்தவூரில் சம்பவம்.
நிந்தவூர்
பிரதான வீதி
"மெடி சையின்" கிளினி சென்டர்க்கு முன்பாக
"ரம்றக் ஒன்றுடன் ஆட்டோ மோதியதில்
ஆட்டோ சாரதியும்
ஆட்டோவில் பயணித்த
பெண் ஒருவரும்
பலத்த காயத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக
நிந்தவூர் ஆதார
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் என
அறிவிக்கப்படுகின்றது.
நிந்தவூரைச்
சேர்ந்த விபத்துக்குள்ளான ஆட்டோ கல்முனை
பக்கமிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று
கொண்டிருந்தபோது வீதியோரம் நின்றுகொண்டிருந்த
"ரம்றக்"வாகனம் திடீரென
வீதிக்கு நுழைந்து
போது ஆட்டோ
ரம்றக்கில் மோதுண்டு விபத்துக்குளாகியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான
ஆட்டோவில் பயணித்த
பெண் நிந்தவூரை
சேர்தவர் எனவும்
குறித்த ரம்றக்
இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்தது எனவும் விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இச்சம்பவம்
தொடர்பாக மேலதிக
விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
முஹம்மட்
ஜெலீல்,
நிந்தவூர்.



0 comments:
Post a Comment