அதிர்வில் பைஸல் காசீம் அவர்களின் கருத்துக்கள்

நிகழ்ச்சியில் தனி ஆளாக தைரியமாக
 கலந்து கொண்டமைக்கும்
அவரது துணிவுக்கும் பாராட்டப்படவேண்டியவரே.


.*ஒலுவில் துறைமுகம் அரசியல் தீர்மானம் என்பதை ஒத்துக்கொண்டார்.
*மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஒலுவிலில் துறைமுகம் அமைப்பதற்கு எடுத்த தீர்மானம் பிழையான தீர்மானம் என்பதை ஏற்றுக்கொண்டார்.

*ஆயிரத்தி மன்னிக்கவும் தொள்ளாயிரத்தி (தடுமாற்றம்) 1988,1989 களில் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஒலுவில் துறைமுகத்தை ஆரம்பித்தார் எனத் தெரிவித்தார்.
*மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் ஒலுவில் துறைமுகம் சரியான முறையில் அமைந்திருக்கும் என்று பிரதி அமைச்சர் பைஸல் காசீம் கருத்தொன்றைக் கூறியதன் மூலம்  ஒலுவிலில் துறைமுகம் சரியான முறையில் அமைக்கும் விடயத்தில் தற்போதய தலைவர் சரியாக அக்கறை காட்டாமல் பொடுபோக்காக இருந்துவிட்டார் என்று கூறாமல் மறைமுகமாகத் தெரியப்படுத்தியுள்ளார்.
*ஒலுவிலில் துறைமுகம் அமைப்பதனால் இப்படி பாரிய ஆபத்துவரும் என்று நாம் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை கடலரிப்பு வந்தபோதுதான் உண்மை நிலை தெரியவந்தது என மக்கள் பிரதிநிதியான பிரதி அமைச்சர் பைஸல் காசீம் கூறினார்.
*இந்தப் பிரச்சினைக்கு துறைமுகத்தை மூடி மீனவர்களுக்கு தடையாக இருக்கும் மண்ணைத் தோண்டி கடலரிப்பைத் தடுக்கவேண்டும் என்று அவரின் ஆலோசனையை வெளியிட்டார்.
*எம்.எச்.எம். அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு மரணித்து அதற்குப் பிறகு தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை விவசாயிகளின் காணிப் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பேசவிருக்கின்றோம் என்றார்.
*மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபுடனான உறவுக்கு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் அன்னாரோடு 3 ஆம் வகுப்பில் கல்வி கற்றதை முன்வைத்தார்.
*நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் வாக்குப்பலம் குறைந்து அதிகாரம் பறிபோனமைக்கு சிலரால் மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதே காரணம் எனக்கூறினார்.
*எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களைவிட அல்லாஹ்வை நம்புவதாக கூறினார்.
*கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் வருகைக்காக கட்சியின் கதவு திறந்திருப்பதாக தலைவர் கூறியிருப்பதை கூறினார்.
*இந்தக் கலந்துரையாடலில் ஒலுவில் துறைமுகம் சம்மந்தமான விடயங்களையும் தகவல்களையும் முன்னுக்குப் பின் முரணாக வெளியிட்டார்.
ஒரு தேசிய ஊடகத்தில், அதுவும் நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் போது, எவ்வாறான பொறுப்புணர்வுடன் தகவல்களை வழங்க வேண்டும் என்பது பற்றிய பிரக்ஞை கூட இல்லாமல், பைஸல் காசிம் பேசியமை, அவரின் ஆதரவாளர்களுக்கும் அவமானமாகும்.

இந்த நிலையில், பிரதியமைச்சர் பைஸல் காசிம் அதிர்வு நிகழ்ச்சியில் வழங்கிய தவறான தகவல்களையும், அவரின் குழப்பகரமான பேச்சினையும் நையாண்டி செய்யும் வகையில், பல்வேறு மீம்கள் சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டுள்ளன.
பேச்சாற்றல், மொழி ஆற்றல் இல்லாத நிலையிலும் விடயங்கள் தகவல்கள் பூரணமாகத் தெரிந்திராத நிலையிலும் பிரதி அமைச்சர் பைஸல் காசீம் அதிர்வு நிகழ்ச்சியில் தனி ஆளாக தைரியமாக கலந்து கொண்டமைக்கும் அவரது துணிவுக்கும் அவர் பாராட்டப்படவேண்டியவரே.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top