சிங்கங்கள் ஆண்ட மண்ணில்
அசிங்கங்கள்
1978ல் சம்மாந்துறை தொகுதி பாராழுமன்ற உறுப்பினனராக எம்.ஏ. அப்துல் மஜீட் பி.ஏ. அவர்கள் தெரிவானார்கள்
அன்றைய அரசில் விவசாய காணி பிரதி அமைச்சராக
கடமையாற்றிய கால கட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தின் தாறாம்பளை, கோமாரி, கிரான் கோமாரி, போன்ற பிரதேசங்களிலும், சம்மாந்துறை பகுதியிலும் அரசாங்க காணி உத்தரவு பத்திரம்கள் பெற்றுக் கொடுத்தார்கள்.
1981ல் கல்முனை கனி பில்டிங் (அல்தாப் ஹோட்டல்) மேல் மாடியில் உசைன் நீதவான் அவர்களது தலைமையில் அஷ்ரப் அவர்கள் ஒரு காணிக் கச்சேரியை நடாத்தினார்கள். அப்போது 8000 ஏக்கர் முஸ்லிம்களின் காணிகள் பறிபோயுள்ளது கண்டறியப்பட்டது.
இக்காணிகளை மீட்டெடுப்பதே நமது முதல் பணி என்றார் அஷ்ரப். பிரேமதாசாவின் ஆட்சிக்காலம், சந்திரிக்காவின் ஆட்சிக்காலம் சந்தர்ப்பங்கள் இருந்தும் அவைகள் நழுவ விடப்பட்டன.
மாறாக தீகவாபிக்கு
10000 ஏக்கர் காணிகள் சுவீகரிக்க பாராழுமன்றில் பிரேரணை வந்தபோது ஏதிர்ப்பில்லை no objection என்றார்.
முஸ்லிம்களுக்கு காணி பெற்றுத் தந்த எம்.ஏ.அப்துல் மஜீட் போன்றவர்களை 1994 தேர்தலில் சமுக துரோகிகளாக சித்தரித்தார்கள்,
அவர்கள் பெற்றுத்தந்த காணிகள் இன்று கறங்கா முதல் சகல இடங்களிலும் சன்னம் சன்னமாக களட்டப்படுகின்றது வக்கு பிணம் போல் வாளாவிருக்கின்றார்கள் நமது பாராழுமன்ற பிரதிநிதிகள்.
அன்று சிங்கங்கள் எமது பிரதேசங்களை அரசாண்டன.
இன்று அசிங்கங்கள் அரசாள்கின்றன.


0 comments:
Post a Comment