மௌலவி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான
 இலவச கருத்தரங்கு

சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள 
DMK ASSOCIATES கல்வி நிலையத்தில்



மௌலவி ஆசிரியர்  போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மௌலவி மற்றும் மௌலவியாக்களின் கவனத்திற்கு!

நடைபெறவுள்ள எழுத்துமூல போட்டிப் பரீட்சையில்
நுண்ணறிவு பரீட்சையில்
ஆசிரியர் தொழிலுக்கான தகைமைகள்,
தர்க்க ரீதியிலான அறிவு,
தீர்மானம் எடுக்கும் இயலுமை, என்பனவும்
பொது அறிவு பரீட்சையில்
ஆசிரியர் துறை தொடர்பில் பொது அறிவு,
தேசிய கல்வி கொள்கை போக்கு,
நவீன கல்வி மயப்படுத்தல் போன்ற பாடப்பரப்பில் வினாக்கள் அமையவுள்ளது.
எனவே இப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மௌலவிமார்கள் மற்றும் மௌலவியாக்களுக்கு இது தொடர்பிலான பூரண அறிவை பிரபல வளவாளரும் உதவி பிரதேச செயலாளருமான  எம்..சி. அஹமட் ஷாபிர் (SLAS, LLB(R), MPA(R) அவர்களின் முழுமையான வழிகாட்டலில் முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.
போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று மௌலவி  ஆசிரியர் தொழிலுக்கு தங்களை தயார்படுத்தும் இக்கருத்தரங்கு எதிர்வரும் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி தொடக்கம் சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள DMK ASSOCIATES கல்வி நிலையத்தில் இடம்பெறவுள்ளது
மௌலவி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து உலமாக்களும் இம்மாபெரும் இலவச கருத்தரங்கில் கலந்துகொண்டு முழுமையாக பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிந்றிர்கள்.
மேலதிக விபரங்களுக்கு 0775746881



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top