மீண்டும் டெங்கு நோய் ஆபத்து
சுகாதார அமைச்சின்
தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை
தற்போது
நிலவும் மழையுடன்
கூடிய காலநிலை
காரணமாக டெங்கு
நோய் பரவும்
ஆபத்து மீண்டும்
தலைதூக்கியுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்
பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி
வாழும் சுற்றுச்
சூழலை தூய்மையாக
வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த பிரிவு
சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை
நாட்டில் 39 ஆயிரத்து 799 பேர் டெங்கு நோய்க்கு
உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலானவர்கள்
கொழும்பு மாவட்டத்திலேயே
பதிவாகியுள்ளனர்.
மழையுடன்
கூடிய காலநிலை
காரணமாக எதிர்வரும்
2 மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென
தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனால்,
இந்த நோய்க்கான
அறிகுறி தென்பட்டால்
உடனடியாக மருத்துவ
பரிசோதனையை செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சின்
தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment