காசா மீது இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்
இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று காசாவில் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காசாவின் 20 இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
25 வயது நஜீப் அஹமது அல் சனீன் என்ற இளைஞர் வடக்கு காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் பாடசாலைக்கு செல்லும் வழியில் 6 சிறுவர்களும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.

0 comments:
Post a Comment