சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து
பணத்தொகையை
கொண்டு
செல்ல முயன்ற நபர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு
பணத்தொகையை கொண்டு செல்ல முற்பட்ட நபரொருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார்
நேற்று (2018.10.22) பகல் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறித்த நபர் நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர்
எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த நபரிடமிருந்து அமெரிக்க டொலர் 35,015 உம், சிங்கப்பூர் டொலர் 319 உம், யூரோ 1,100 உம் மற்றும் இலங்கை பணம் 25,000 ரூபாயும் மொத்தமாக 64 இலட்சத்து 13 ஆயிரத்து
273 ரூபாய் பெறுமதியானப் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment