05.11.2019 அன்று இடம்பெற்ற
அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட
தீர்மானங்கள்
01. 'தருவன் சுரகிமு' - சிறுவர்களைப் பாதுகாப்போம் என்ற தேசிய அறக்கட்டளைக்கு தொடர்ச்சியாக நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல்
'தருவன் சுரகிமு' - என்ற சிறுவர் பாதுகாப்பு அறக்கட்டளையை வலுப்படுத்துவதற்காக தேசிய லொத்தர் சபை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வாரத்தில் ஒருமுறை அதிஷ்டம் பார்க்கப்படும் அதிஷ்ட இலாப சீட்டடொன்றை 2019.11.11 அன்று அறிமுகப்படுத்துவதற்கும், இந்த அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை விலையில் 10 சதவீதத்தை சிறுவர் பாதுகாப்பு தேசிய அறக்கட்டளையில் வைப்பீடு செய்வதற்குமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. 1953ஆம் ஆண்டு இல 21 இன் கீழான பாராளுமன்ற (அதிகாரம் மற்றும் சலுகைகள்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்
1953ஆம் ஆண்டு இலக்கம் 21 இன் கீழான பாராளுமன்றம் (அதிகாரம் மற்றும் சலுகைகள்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்தத்திற்கான சட்ட திருத்த வரைவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்;கியுள்ளது.
03. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் செயலகம் மற்றும் பூவி சார்ந்த அறிவியல் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனத்திற்கும் இடையில் விஞ்ஞான ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுதல்
இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையில் புவியியல் மற்றும் கனியவளம் துறைகளுக்கான இருதரப்பும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாற்றிக் கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. உணவு பாதுகாப்பு மற்றும் இடர் தொடர்பான தேசிய மதிப்பீடு – 2019
இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு தள ஆய்வை உறுதி செய்வதற்காக குருநாகல் மாவட்டத்தை உள்ளடக்கி நடைமுறைப்படுத்தவுள்ள உத்தேச சாத்தியக்கூறு அறிக்கை ஆய்வு அடிப்படையிலான அனைத்து தரப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் இடர் மதிப்பீட்டு ஆய்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தேசிய உணவு பாதுகாப்பை உறுதி செய்து அதற்கு தேவையான மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுக்கள், அமைச்சு நிறுவனங்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பான குழுவொன்றை ( National Food
security Cluster) ஸ்தாபிப்பதற்காக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. பொருளாதார சேவை கட்டணம் (திருத்தம்) திருத்த சட்டமூலம்
தேசிய வரவு செலவு திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2006ஆம் ஆண்டு இல 13 இன் கீழான பொருளாதார சேவை கட்டண சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 1988ஆம் ஆண்டு இல 30 இன் கீழான வங்கி சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்
1919ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையின் மூலம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வகையில் வங்கித் துறையில் உள்ளுர் பங்கு உரிமைத் தன்மையை மேம்படுத்துவதற்காகவும் அதே போன்று இலங்கையில் அனுமதி பத்திரம் பெற்ற வணிக வங்கிகளின் சமமாக அல்லது போதுமானதாக இருக்கும் தேவையை வலுவூட்டுவதற்காக 1988ஆம் ஆண்டு இல 30 இன் கீழான வங்கி சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட 2007ஆம் ஆண்டு இல 1 இன் கீழான உத்தரவுகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களும் நிதிஅமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டுப் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தேசிய வருமானம் (திருத்த சட்ட மூலம்)
1919ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட வருமான ஆலோசனை நிவாரணங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. தொற்றா நோயான சிறுநீரக நோய் / காரணம் அறியப்படாத தொற்றா நோயான சிறுநீரக நோயாளர்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுதல்
வடமத்திய மாகாணத்தில் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தொற்றா நோயான சிறுநீரக நோய் மற்றும் காரணம் அறியப்படாத சிறுநீரக நோய் தொடர்பான ஒன்றிணைந்த ஆய்வை ஆரம்பிப்பதற்காக அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான தொழில்நுட் அமைப்பு (ANSTO), நோயின் காரணம் அறியப்படாத தொற்றா நோயான சிறுநீரக நோயை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கென அமெரிக்காவின் ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக எளிமையான தரவுகளை பரிமாறுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. கடற்றொழில் சமூகத்திற்காக நிவாரணம் வழங்குதல்
களமெட்டிய கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகாமையில் இந்த வருடம் ஜீன் மாதம் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த துறைமுகத்திற்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் கொண்டிருந்த வளங்கள் மற்றும் வலைகள் சேதமடைந்திருந்தன இதனால் இந்த கடற்றொழில் துறையை நம்பி வாழ்வோரின் வாழ்க்கை நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த கடற்றொழிலாளருக்கு வள்ளங்கள் என்ஜின்கள் மற்றும் கடற்றொழிலுக்கான மூலப்பொருட்கள், உபகரணங்களை வழங்குவதற்காக தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கென விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. நாடு முழுவதிலும் மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளாகக் கூடிய பிரதேசங்களை பிரகடனப்படுத்துதல் மற்றும் இவ்வாறான அனர்த்த நிலை உள்ள பிரதேசங்களில் மண்சரிவு அனர்த்தத்தை மதி;ப்பீடு செய்யும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தல்
மண்சரிவு அனர்த்தத்தை கொண்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு மேலாக மொனராகலை, குருநாகல், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும்; அனர்த்தத்திற்குள்ளாகக் கூடிய பிரதேசங்களை அறிவிப்பதற்கும், தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் மண்சரிவு அனர்த்தத்தை மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை அடையாளம் காண்பதற்கும் அரச நிர்வாகம், இடர்முகாமைத்துவம் மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 1979 ஆம் ஆண்டு இல 40 இன் கீழான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்புக்கான அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2019ஆம் ஆண்டு வரவு செலவு முன்மொழிவு மற்றும் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய பொருட்களை இறக்குமதி செய்யும் பொழுது செஸ் வரியை நீக்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கான அங்கீகாரத்திற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கென அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திறகு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. சிறுநீரகம் ஊனமுற்ற நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படும் நார் துளைகளைக்கொண்ட 300, 000 பொலிசல்போன் ஃ பொலிநென் ரோன் இரத்த கசிவு வடிகட்டிகளை கொள்வனவு செய்தல்
சிறுநீரகம் ஊனமுற்ற நோயாளர்களின் இரத்தத்தை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் இரத்த கசிவு வடிகட்டிகளாக பயன்படுத்தப்படும் 300, 000 பொலிசல்போன்ஃ பொலிநென் ரோன்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சிங்கப்பூர் Nipro Asia Ote Ltd என்ற நிறுவனத்திடம் 1.35 மில்லியன் அமெரிக்க டொலர்களில் கொள்முதல் செய்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியதுறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. 55, 000 Dried factor viii fraction 200 IU-350
IU Vials of Purified and detergent treated Contentrated Monoclona விநியோகிப்பதற்கான பெறுகை
இமோபீலியா நோயாளர்களின் சிகிச்சையை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் 55, 000 Dried factor
viii fraction 200 IU-350 IU Vials of Purified and detergent treated Contentrated
Monoclonal குப்பிகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழு சிபாரிசுக்கமைய சுவிஸ்லாந்தில் உள்ள Ms.Baxalta GmbH நிறுவனத்திடம் 3.35 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியதுறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 60 000 Human Immunoglobulin (IV) குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை
மீள்சக்தி குறைபாடுடைய நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படும் Human Immunoglobulin
(IV) 60,000 குப்பிகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவில் Ms. Reliance Life
Science என்ற நிறுவனத்திடம் 6.76 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. 1,300,000 பில்ம்லேசர் பளு பேஸ் ட்ரை சீஆர், டீஆர் சிட் மற்றும் எம்ஆர்ஐ விநியோகிப்பதற்கான பெறுகை
புஜி லேசர் அச்சிடும் இயந்திரத்திற்கு பயன்படுத்தக்கூடிய 35 cmx 43 cm அளவிலான புளு பேஸ் ட்ரை MRI வன் பிலிமர்ஸ் 130,000 ஐ விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழவின் சிபாரிசுக்கமைய ஜப்பானின் Ms. Fujifilm
Corporation என்ற நிறுவனத்திடம் 1.89 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனை சேவைக்கான பெறுகை
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வடமத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் சுகாதார சேவை நிறுவனங்கள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் உள்ள அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த தொழிற்துறையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் மற்றும் ஆலோசனை அலுவல்கள் அமைச்சரவையினால்; நியமிக்கப்பட்ட சிபாரிசுக்கமைவாக வரையறுக்கப்பட்ட ரிசோசர்ஸ் டிவலப்மன்ட கன்சல்ட்டன்ட் (தனியார்) நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியதுறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய ஆதார வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல்
6186 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு போதுமான அடிப்படை வசதிகளுடன் கூடிய சிகிச்சைப் பிரிவு சத்திர சிகிச்சை வாட், திடிர் அனர்த்த மற்றும் அவசர சத்திர சிகிச்சை பிரிவு ஒலிக்கதிர் திணைக்களம் மற்றும் இரசாயனக் கூடங்களை ஸ்தாபிப்பதற்கும் 9 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கும் 6228 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் பலபிட்டிய ஆதார வைத்திய சாலைக்கு வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் விபத்து மற்றும் அவசர சேவைப் பிரிவு, அனைத்து வாட்டுக்கள் சத்திர சிகிச்சை இரசாயன கூடம் மற்றும் உதவி சேவைகளை முன்னெடுப்பதற்குமாக பத்து மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. சூரிய சக்தி திட்டத்தின் கட்டம் 2 இன் கீழ் சிறிய அளவிலான சூரிய சக்தி உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தல்
சூரிய சக்தி திட்டத்தின் கட்டம் 2 இன் கீழான நிகழ்ச்சி நிரலின் கீழ் சிறிய அளவிலான சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தல் உரிமை மற்றும் பராமரித்தல் அடிப்படையின் கீழ் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தலின் கீழ் மொனராகலை கிரிட் துணை நிலையங்களுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டுக் குழுவின் சிபாரிசுக்கமைய Gold Corporation Lanka
(Pvt) Ltd. என்ற நிறுவனத்திடம் மின் அலகு கிலோவோட்ஸ் ஒன்றை 14.24 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் அடிப்படையின் கீழ் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19. 1300 கிலோமீற்றர் ஏரியல் பன்டல் நடத்தல், வழங்குதல் மற்றும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம்
இலங்கை மி;ன்சார சபையின் விநியோக வலயத்திற்கான 1,300 கிலோமீற்றர் ஏரியல் பன்டல் நடத்தல்; வழங்குதல் மற்றும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட ஏசிஏஎல் கேபல்ஸ் (பொது) நிறுவனத்திடம் 789.45 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
20. உள்ளுர் மின் செலுத்தும் கம்பி மற்றும் விநியோகிக்கும் நீர் அபிவிருத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தெஹிவளை , கல்கிஸை மற்றும் பத்தரமுல்லை பிரதேசத்தில் ஆரம்ப துணை கோபுரம் மற்றும் கேபல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்
உள்ளுர் மின் செலுத்தும் கம்பி மற்றும் விநியோக வலைப்பின்னல் அபிவிருத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் 4ஆவது பொதி லோட் ஏ பகுதிகளின் கீழ் தெஹிவளை , கல்கிஸை மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களில் ஆரம்ப உப கோபுரம் விநியோக கோபுரங்களை நிர்மாணித்தல் மற்றும் கேபல்களை விநியோகிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவின் Siemens Limited என்ற நிறுவனத்தினால் இலங்கையின் வரையறுக்கப்பட்ட டிமோ (தனியார்) நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டு வர்த்தகத்திடம் 4,594.43 மில்லியன் ரூபாவிற்கு சமமான தொகையை வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
21. புத்தளம் லக்விஜய மின்உற்பத்தி நிலையத்தின் பராமரிப்புக்கான பெறுகை
புத்தளம் லக்விஜய மின்உற்பத்தியின் முதலாவது பிரிவில் B மட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்கான திறனாற்றல் சக்தி படையணியை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய China Machinery
Engineering என்ற நிறுவனத்திடம் 3.84 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
22. புத்தளம் அனல்மின் நிலையத்திற்கான உடனடி (Spot Tender) கொள்வனவின் கீழ் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்தல்
புத்தளம் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்திற்காக உடனடியாக கொள்வனவு செய்யும் ( Spot Tender) திட்டத்தின் கீழ் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஒரு மெற்றிக் தொன் 67.39 அமெரிக்க டொலர்கள் என்ற வீதம் 240, 000 மெற்றிக் தொன்னை சிங்கப்பூரின் M/s Adani Global Pte
Ltd. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
23. லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு 900 மெஹாவோல்ற் நிலக்கரியை விநியோகிப்பதற்கான கேள்வி ஒப்பந்தத்ததை வழங்குதல்
நுரைச்சோலை நிலக்கரி லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியான 2.25 மில்லியன் மெற்றிக் தொன்களில் 50 சதவீதத்தை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய 1 மெற்றிக் தொன் 60.71 அமெரிக்க டொலர்கள் வீதம் சிங்கப்பூரில் உள்ள M/S Swiss Singapore
Overseas enterprises Pte.Ltd என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. காலநிலை தாக்கத்தை குறைப்பதற்கான திட்டத்தின் கீழ் உத்தேச இடர் அனர்த்தத்தை குறைப்பதற்காக கண்காணித்தல் மற்றும் தொடர்பாடல் கேந்திரத்தின் ஒன்றிணைந்த வாஸ்த்து விஞ்ஞான ஆலோசனை சேவை
காலநிலை தாக்கத்தை குறைப்பதற்கான திட்டத்தின் கீழ் காலநிலை வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்திற்கான உத்தேச இடர் அனர்த்தத்தை குறைப்பதற்கான கண்காணிப்பு மற்றும் தொடர்பாடல் கேந்திரத்துடன் கூட்டாக வாஸ்த்து விஞ்ஞான சேவை ஆலோசனைக்கான ஒப்பந்தம் 63.43 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு Design Group Five
International (Pvt) Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கு விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்ப்பாசனம் மற்றும் கடல் தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. மீள சமூகமயப்படுத்தப்பட்ட மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களுக்கு பட்டதாரி தொழில் வாய்ப்பு பரிந்துரை நடைமுறையின் கீழ் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல்
வடக்கு கிழக்கில் நிலவிய மோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சமூக மயப்படுத்தப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த 65 பேருக்கு பட்டாரி பரிந்துரை முறையின் கீழ் இதற்கு முன்னர் நியமனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தின் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்ட பட்டப் படிப்பை பூர்த்தி செய்த மேலும் 20 இளைஞர் யுவதிகளுக்கு இந்த பரிந்துரை முறையின் கீழ் நியமனங்களை வழங்குவதற்காக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் , மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. கணனி அறிவு தொடர்பிலான விடயங்களை பூர்த்தி செய்த கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி செலவை மீள் அளித்தல்
நாட்டில் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களை உள்ளடக்கிய வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கிராம உத்தியோகத்தர் தரவு கட்டமைப்பின் கீழ் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு வரும் பயனாளிகளுக்கு கணினியின் ஊடாக பல்வேறு சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும். மேலும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் கிராம உத்தியோகத்தரின் கணனி சார்ந்த தேவையான பயிற்சியை பூர்த்தி செய்தல் வேண்டும். இதற்கு அமைவாக தரம் ஐஐஐ கிராம உத்தியோகத்தர் நியமனத்தில் இருந்து மூன்று (03) வருட காலத்திற்குள் கணனி அறிவு தொடர்பில் தேவையான விடயங்களை பூர்த்தி செய்யும் அதிகாரிகளுக்கு அதற்கான பயிற்சி செலவை மீள அளிக்கும் வகையில் 7,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல்வேறு தொல்லைகளுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துதல்
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல்வேறு இடையூறுகளுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசை கவனத்தில் கொண்டு இவ்வாறான 78 ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் சிபாரிசிற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. திரவ பெற்றோலிய எரி வாயுவை உடனடியாக கொள்வனவு செய்தல்
2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சவுதிஅரேபியாவில் எரி பொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவும், இலங்கையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக அதற்கான கோரிக்கை அதிகரித்தது. இதனால் கடந்த சில தினங்களில் சந்தையில் எரி வாயுவிற்கான தட்டுப்பாட்டை காணக்கூடியதாக இருந்தது. இதற்கு அமைவாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான சந்தைக் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கான உடனடி பெறுகையான 12 ஆயிரம் மெற்றிக் தொன் திரவ பெற்றோலிய எரி வாயுவை கொள்வனவு செய்வதற்காக நிதி அமைச்ர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான விமானத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
ஸ்ரீலங்கன் விமான சேவை தற்பொழுது 19 நாடுகளுக்கு 37 விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த சேவைகளை முன்னெடுப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள 12 விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு தேவையான விமான எரிபொருளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. சிறுநீரக நோயாளர்களுக்கு தன்னியக்க தானியங்கி பெரிட்டோனியல் டயாலிசிஸ் முறையைப் பயன்படுத்துவதை வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்கான முறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம்
சிறுநீரக நோயாளர்களுக்கு தானியங்கி பெரிட்டோனியல் டயாலிசிஸ் முறையை (Automated Peritoneal
Dialysis) முறையை வீட்டில் இருந்தே பயன்படுத்தி சிகிச்சையை பெற்றுக்கொள்ளக்கூடிய வீட்டு டயாலிசிஸ் அமைப்பு (Home Dialysis System)
என்ற கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சேவையை பெற்றுக் கொள்வதற்காக, சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. மதுறுஓயவத்த புதிய தேசிய பாடசாலையை நிர்மாணிக்கும் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தம்
அனைத்து மாணவர்களுக்குமான சமநிலையைக் கொண்ட தரமான கல்வியை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் குருநாகல் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேச மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்வதற்காக குருநாகல் மதுருஓயவத்த என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 800 மில்லியன் ரூபா முதலீட்டுடன் விஸ்ஓதா என்ற புதிய தேசிய பாடசாலையை நிர்மாணிக்கும் 2 ஆம் கட்ட பணியின் கீழ் நிர்மாண பணிக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment