2017.11.01 ம் திகதி எடுக்கப்பட்ட
தீர்மானங்களின் அடிப்படையிலான
சாய்ந்தமருது
மக்கள் பிரகடனம்
2017.11.01 ம் திகதியாகிய இன்று சாய்ந்தமருது- மாளிகைக்காடு
ஜூம்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைமையின் கீழ் உலமாக்களும், வர்த்தக சமூகமும்,அனைத்து சிவில், இளைஞர் அமைப்புக்களும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் சாய்ந்தமருது
உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வது
தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலான வீறுகொண்டெழுந்த
சாய்ந்தமருது மக்கள் பிரகடனம் பின்வருமாறு.,
1. தொன்றுதொட்டு காலம் காலமாகப் பேணிவரும் ஒற்றுமையையும்
சகோதரத்துவத்தையும் நாட்டின் ஒற்றுமைக்கும்,இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவண்ணம்
பேணிப்பாதுகாக்க எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்
2. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை
பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வளங்களும், அடிப்படைத் தகுதிகளும் சந்தேகமின்றித் தெளிவாகவே
இருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றோம்.
3. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு எல்லைக்குள் எல்லா அரசியல்
கட்சிகளினதும் சகல விதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ ஒத்துழைப்போ
வழங்குவதில்லை.
4. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, இதற்குப் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும்
சாய்ந்தமருது –மாளிகைக்காடு
ஜும்மாப் பள்ளிவாயல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு
முன்னிறுத்துதல்.
5. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சாய்ந்தமருது- மாளிகைக்காடு எல்லைக்குள் இடம்பெறுகிண்ற எந்தவிதமான
நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த உள்ளுர் அரசியல் பிரமுகர்களை அழைக்காதிருத்தல்.
6. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,இப்பிரதேச எல்லைக்குள் எந்தவிதமான கட்சி
அரசியல் நடவடிக்கைகளுக்கும், கட்சி செயலகங்களுக்கும் இடமளிக்காதிருத்தல்.
7. சாய்ந்தமருது மக்களுக்கு நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய தனியான உள்ளுராட்சி
சபைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதமாக நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல்
இருக்கின்ற ஒன்றினை முன்னிலைப்படுத்தி கல்முனையை நான்காகப் பிரித்தே
சாய்ந்தமருதுக்கான தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமற்ற
கோரிக்கையாகும்.
8. இந்தப் பிரகடனத்தை மீறும் விதமாகச் செயற்படும், செயற்பட முயற்சிக்கும், அல்லது அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு
ஒத்துழைப்பு வழங்குகின்ற எமதூரைச் சேர்ந்த அனைவரும் இவ்வூரின் ஜமாஅத்
கட்டுப்பாட்டை மீறியவராகக் கருதப்படுவர்.
9. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை
வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ
எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தனிநபர்கள் அனைவரும் துரோகிகளாவர்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபை,
உலமா சபை
பொது அமைப்புகள் ஒன்றியம்
Sainthamaruthu Declaration
01. Without affecting the unity
and integrity of our nation, we will continually take all possible steps to
maintain the unity and brotherhood preserved traditionally and for a long
period of time.
02. We would like to clarify to
those who are concerned that Sainthamaruthu without any doubt and clearly has
all the resources and basic eligibilities to have a separate local government
body.
03. Until the separate local
authority for Sainthamaruthu is officially published in the government gazette,
we shall not support or cooperate with any kind of party related activity of
political parties within the boundary limit of Sainthamaruthu Maligaikadu.
04. Until the separate local
government body for Sainthamaruthu is officially published in the government
gazette, we under the guidance of the Trustee Board of Sainthamaruthu
Maligaikadu Jummah Mosques shall field an independent group not related with
any political party in all the elections held hereafter.
05. Until the separate local
government body for Sainthamaruthu is officially published in the government
gazette, local party related political figures shall not be invited to any
event held within the Sainthamaruthu Maligaikadu boundary limit.
06. Until the separate local
government body for Sainthamaruthu is officially published in the government
gazette, any political campaign or party secretariat shall not be accommodated
within the Sainthamaruthu Maligaikadu boundary limit.
7. The demand that a separate
local government body to Sainthamaruthu shall be provided by dividing the
Kalmunai Municipal Council into four bodies is unjustifiable. This demand
showcasing one being unresolved for a long time is to blunt the justifiable
demand for the separate local government body for the Sainthamaruthu people.
8. All those who act or try to
act to violate this declaration or cooperate with those who are acting so shall
be deemed as those who have violated the control of Jama’at of this village.
9. All the individuals who
directly or indirectly carry out any activity with the purpose of blunting the
actions for securing a local government body to Sainthamaruthu will be deemed
as traitors.
President Secretary
Trustee Board
Jamiyyathul Ulama &
Federation of Public Societies
Sainthamaruthu – Maligaikadu
0 comments:
Post a Comment