நாடாளுமன்றில் கடைசி உரை
முக்கிய அறிவிப்பு ஒன்றை
வெளியிடவுள்ள மைத்திரி?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நேரத்திலும் முடிவடையலாம்.
இந்த நிலையில், ஜனாதிபதியாக, நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை அடுத்தவாரம் நிகழ்த்தவுள்ளார்.
வரும் 7ஆம் திகதி, வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனது உரையில் கவனம் செலுத்தவுள்ள முக்கியமான விடயம் என்னவென்று தெரியவரவில்லை.
எனினும், மிகவும் சர்ச்சைக்குரிய, முக்கியமான உரையை அவர் நிகழ்த்துவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment