காடையர்களை கைது செய்யுமாறு கோரி
சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் கடந்த முதலாம் திகதி  வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பீச் பார்க்கில் நடைபெறுவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகண பவணியை பிரதான வீதியில் நின்று அவதானித்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலரை தாக்கிய குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (2019.11.03) நண்பகல் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக நடைபெற்றது.

இதன்போது தேர்தல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துங்கள், அரச வளங்களை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தாதே போன்ற கோஷங்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோரால் எழுப்பப்பட்டது.
Ø  பொலிஸாரே, காடையர்களை கைது செய்.
Ø  பொலிஸாரே, குண்டர்களிடமிருந்து பொதுமக்களை காப்பாற்று
Øபொலிஸ்மா அதிபரே, சட்டம் பொலிஸாரின் கையிலா, குண்டர்களிடமா?     
Ø  சட்டம் பொலிஸாரின் கையிலா, குண்டர்களிடமா?                    
Ø  நல்லாட்சியே, குற்றவாளிகளை கைது செய்.       
Ø  நல்லாட்சியே, நீதி எல்லோருக்கும் பொதுவானதே.
Ø  தேர்தல் ஆணையாளரே, காடையர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குக.
                                                                                           
என்பன போன்ற சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்திய வண்ணம் காணப்பட்டனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top