கோத்தபாயவுக்கு ஆதரவான
அதாவுல்லாவின் பிரசாரத்தை குழப்ப முயற்சி!
தேர்தல் மேடைக்கு கல் வீச்சு தாக்குதல்
அட்டானைச்சேனையில் சம்பவம்
கோத்தபாய
ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசாரக்
கூட்டத்தை குழப்புவதற்கான
நடவடிக்கைகள் அட்டானைச்சேனைப் பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டானைச்சேனை
பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் வெற்றியை
உறுதிப்படுத்தும் தேசிய காங்கிரஸின் பொதுக் கூட்டம்
இன்று இரவு
நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இதன்
போது சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
ஆதரவாளர்னளினால் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு,
மேடையை நோக்கி
கற்களும் வீசப்பட்டதாக
அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா
பேசிக்கொண்டிருக்கும் போது சத்தம்
போட்டு இடைஞ்சல்கள்
ஏற்படுத்தியதோடு, சில நிமிடங்கள் அமைதியற்ற சூழல்
ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் முன்னாள்
அமைச்சரின் கூட்டத்தினை நிறுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்
முன்னாள் அமைச்சர்
அதாவுல்லா தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில்
அதாஉல்லாஹ்வின் "ஜனாதிபதி தேர்தல்"
பிரச்சாரத்தினதும் கல்லெறி பற்றியும் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது,
அழகான
முறையில் "எனது உடன் பிறப்புகளே" என தனது பேச்சை ஆரம்பித்து
சென்ற அதாவுல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளர்களைப்பற்றி பேசாமல் முஸ்லிம் காங்கிரஸ். தலைவர் ஹக்கீமைப்பற்றி
கேவலமாக பேசுவதை
தொடர்ந்து செல்கின்றார்
தொடர்ந்து செல்லும்போது
இடையே ஒரு
சிலரின் கூக்குரல்
சத்தம் கேட்கின்றது...
சத்தம்
கேட்டதும் "ஊழையிடும் நாய்களுக்கு பின்னால் நீங்கள்
யாரும் செல்லவேண்டாம்"
என தனது
ஆதரவாளர்களைப்பார்த்து அதாவுல்லாஹ் பனிக்கின்றார் அதற்கு
உச்சாப்பு போராளிகள்
கோசம் இட்டு
சிரிக்கின்றார்கள் அதாவுல்லாஹ் மீண்டும் "நாய்கள்தான்
ஊழையிடும் எங்களுக்கும்
ஊழையிடத்தெரியும்" என சிரித்தவாறே
கூறி மீண்டும்
ஹக்கீமைப்பற்றி தவறாக பேச ஆரம்பிக்கின்றார்..
மீண்டும்
கோசம் ஆரம்பிக்கின்றது
கல்லெறி விழுகின்றது
சுற்றி வளைத்து நின்ற
தேசிய காங்கிரஸ்
ஆதரவாளர்கள் அதாவுல்லாஹ்வை பாதுகாக்க
தலையில் கவசத்தை
அணிந்துகொண்டு பேச்சை நிறுத்தாமல் பத்துமணிவரை பேசுமாறு
அதாவுல்லாஹ்வை
வற்புறுத்துகின்றார்கள்...
ஆதரவாளர்களின்
பேச்சை தட்டமுடியாத
அதாவுல்லாஹ்வும்
தான் பேசியதையே
மீண்டும் மீண்டும்
தடுமாறி தடுமாறி
சம்மந்தமில்லாமல் பேசி எப்படியோ குறிப்பிட்ட நேரத்தை
மைக்கோடு முடிக்கின்றார்..!!
பின்னர்
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அமைதியற்ற சூழலை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment