தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில்
பதைபதைப்பில் அயோத்தி மக்கள்
அயோத்தி
தீர்ப்பு வெளியாக
உள்ள நிலையில்,
என்ன நடக்குமோ
என்ற பதைபதைப்பில்,
அயோத்தி மக்கள்
உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அயோத்தி
வழக்கில், தீர்ப்பு
யாருக்கு சாதகமாக
வந்தாலும், அது, தங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும்
என, அயோத்தி
மக்கள் கருதுகின்றனர்.அதனால், பலர்,
தங்கள் குடும்பத்தினரை,
இப்போதே வெளியூருக்கு
அனுப்பி விட்டனர்.
மேலும் சிலர்,
அத்தியாவசிய பொருட்களை, முன்கூட்டியே வாங்கி சேகரித்து
வருகின்றனர்.'அயோத்தி தீர்ப்பு வெளியாகி, சில
நாட்களுக்கு பின் தான், எங்களுக்கு நிம்மதி
ஏற்படும்' என,
அயோத்தி மக்கள்
பலரும் தெரிவித்துள்ளனர்.
அயோத்தியில்,
சர்ச்சைக்குரிய நிலத்தில், பிரமாண்ட ராமர் கோவில்
கட்டுவதற்காக, 1990ம் ஆண்டு
முதல், சிற்ப
துாண்களை செதுக்கும்
பணியில், வி.எச்.பி.,
எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு
ஈடுபட்டு வருகிறது.
இந்தப் பணியில்,
நுாற்றுக்கணக்கான கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தி
தீர்ப்பு வெளியாக
உள்ள நிலையில்,
சிற்ப துாண்கள்
செதுக்கும் பணியை, வி.எச்.பி.,
நிறுத்தியுள்ளது. இது பற்றி, வி.எச்.பி., செய்தி
தொடர்பாளர் சரத் சர்மா கூறுகையில், ''அயோத்தி
தீர்ப்பு வெளியாக
உள்ளதால், சிற்ப
துாண்கள் செதுக்கும்
பணியை நிறுத்த,
வி.எச்.பி., தலைவர்கள்
கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன. கலைஞர்கள், தங்கள்
சொந்த ஊருக்கு
சென்றுள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியான பின்,
பணிகளை எப்போது
தொடங்குவது என,
வி.எச்.பி., தலைவர்கள்
முடிவு செய்வர்,''
என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment