அதிநவீன
வசதிகளுடன் கூடிய
இலங்கை
இராணுவ தலைமையகம்
இன்று திறந்து
வைக்கப்பட்டது
அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்
தலைமையகம் ஜனாதிபதியின் தலைமையில் இன்று (08) திறந்து வைக்கப்பட்டது.
இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத் தலைமையகத்தையும்
ஒரே இடத்தில் அமைக்கும் நோக்குடன் பெலவத்த, அக்குரேகொடயில் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு 2011 மார்ச் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது.
இதற்கான உத்தேச செலவு 53.3 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன், இலங்கையில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய
கட்டிட நிர்மாணத் திட்டம் இதுவாகும்.
அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகளையும் இந்த
கட்டிடத்தொகுதி கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment