நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்
தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா?
 முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா?
என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது
மஹிந்த மட்டக்களப்பிற்கு வந்த போது
என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டார்.
கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டேன்
விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவிப்பு



ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக களமாக ஒருபோதும் இல்லாத வகையில் மாற்றமடைந்து வருகின்றது. ஏனென்றால் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். என முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.
சம்பந்தன் வாப்பாவின் (இவர் சோனகனுக்கு பிறந்தவர் என்று சொல்லாமல் கூறிய வார்த்தையே இது) மரபணுவை (டி.என்.) பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு எனவும்  தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஸவை ஆதரித்து நேற்று (13) மதியம் கல்முனையில் தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்)  மேற்கண்டவாறு கூறினார்.
விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

நடைபெறவுள்ள இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக களமாக மாற்றமடைந்து வருகின்றது. தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது.

இதில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மட்டக்களப்பிற்கு வந்த போது என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டார். கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் கல்முனையை தரமுயர்த்த விடக்கூடாது என கூறும் முஸ்லிம் கட்சிகளை சஜித் பிரேமதாச அரவணைத்து வருகின்றார்.

சம்பந்தன் வாப்பாவின் (இவர் சோனகனுக்கு பிறந்தவர் என்று சொல்லாமல் கூறிய வார்த்தையே இது) மரபணுவை (டி.என்.) பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று கூற விரும்புகின்றேன்.

.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்து என் செய்ய வேண்டும் என்று  மஹிந்த எங்களிடம் கேட்டார் நாங்கள் சொன்னோம் மட்டக்களப்பு மாவட்டத்தை விட கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு தான் கேட்டோம் . அப்போது அவர் கேட்டார் அம்பாறை பிரச்சினைகளை ஏன் இங்கு கதைக்கிறீர்கள் என்றார் நான் சொன்னேன் இது அம்பாறை பிரச்சினை இல்லை. இது கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை என்றேன் உடனே கல்லடியில் கல்முனை வடக்கு பிரதேச தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக பேசினார்.

முஸ்லிம் தரப்பு எல்லை நிர்ணயம் செய்யாமல் தடுப்பதேன் அவர்கள் களவெடுத்து வைத்த காணியெல்லாம் பிடிபடும் என்றுதான். இதற்கு தீர்வாக நாம் கிழக்கில் மொட்டு விற்கு வாக்களிப்போமானால் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

இப்போது சஜித் பிரேமதாஸவிற்கு வாக்கு கேட்கும் முஸ்லிம் தலைவர்கள் பெரும் இனவாதிகளாக இருக்கின்றனர் . அவர்களுடன் தமிழர்கள் சேர்வதுதான் துயரம் . முஸ்லிம் அரசியல் வாதிகள் இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்றை சொல்கிறார்கள். தமிழ் மக்களுக்காக சர்வதேசத்தில் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன்.

.கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் ரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கைசாத்து இட்டுள்ளேன். 12000 போராளிகளை எனது பொறுப்பில் எடுத்து விடுவித்துள்ளேன் . இந்த தடவை இவற்றை கணக்கிலெடுத்து கோட்டாபய ராஜபக்ஸவை வெற்றி பெற செய்ய வேண்டும் ஏனென்றால் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும்.  என தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top