இஸ்லாமிய இனவாதிகளுக்கும் எதிராக
ஒரே தீர்மானத்தை எடுத்து வாக்களிக்க வேண்டும்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்
ஞானசார தேரர் விடுத்துள்ள கோரிக்கை!
“நல்லாட்சி
அரசாங்கத்தை தமிழ்ப் பிரிவினைவாதிகளும்,
இஸ்லாமிய அடிப்படைவாத
இனவாதிகளுமே 2015ம் ஆண்டில் ஆட்சிக்கு கொண்டுவந்தனர். நாடு தற்போது மரண விளிம்பில் உள்ளது. பௌத்த சிங்கள
மக்கள் இணைந்து
பிரிவினைவாதத்திற்கும், இஸ்லாமிய இனவாதிகளுக்கும்
எதிராக ஒரே
தீர்மானத்தை எடுத்து ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில்,
பௌத்த சிங்கள
மக்கள் இணைந்து
பிரிவினைவாதத்திற்கும், இஸ்லாமிய இனவாதிகளுக்கும்
எதிராக ஒரே
தீர்மானத்தை எடுத்து வாக்களிக்க வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு
நாயாறு – நீராவியடி
பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு
ஒருவரை நீதிமன்ற
தடையுத்தரவை மீறி தகனம் செய்த சம்பவம்
தொடர்பில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள வழக்கில் ஞானசார தேரர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்
முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு
விசாரணை முடிந்த
பின்னர் நீதிமன்ற
வளாகத்தில் வைத்து, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்
குறித்து ஊடகங்களுக்கு
காரசாரமான கருத்தை
அவர் வெளியிட்டார்.
தொடர்ந்தும்
கருத்து வெளியிட்டிருந்த
அவர், “நல்லாட்சி
அரசாங்கத்தை தமிழ்ப் பிரிவினைவாதிகளும்,
இஸ்லாமிய அடிப்படைவாத
இனவாதிகளுமே 2015ம் ஆண்டில் ஆட்சிக்கு கொண்டுவந்தனர்.
எனினும்,
இம்முறை அவர்களுக்கு
எதிராக சிங்கள
மக்கள் ஒற்றுமையாக
இணைந்து வாக்களிக்க
வேண்டும் என்றும்
ஞானசார தேரர்
கேட்டுக்கொண்டுள்ளார். நாடு மிகவும்
மரணவிளிம்பில் உள்ளது. எந்தவொரு நபருக்கும் இந்த
நிலை உணரமுடியும்.
நாடு
மீது பற்றுகொண்டுள்ள
மக்களிடம் கேட்டுக்கொள்வது
என்னவென்றால், சிங்களம் மற்றும் பௌத்த மக்கள்
இந்த முகாமில்
உள்ள நிலையில்,
நாடு அபாயத்தை
எதிர்கொண்டுள்ள நிலையில், சிங்கள மக்கள் பலவீனமான
முடிவினை எடுத்தால்
அந்த தீர்மானத்தை
எதிர்காலத்தில் மாற்றியமைக்க முடியாமல் போய்விடும்.
அதனால்
எந்தவொரு காரணத்திற்காகவும்
ஏதாவது ஒரு
தரப்பினரை பலப்படுத்த
பிரிவினைவாத தமிழ்க் குழுக்கள் முயற்சிசெய்தால் அதேபோல
இஸ்லாமிய அடிப்படை
பிரிவினைவாதம் மீண்டும் அரசியல் ரீதியாக பலமடைந்து,
சிங்கள மக்களுக்கு
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய
இடத்திற்கு தள்ளப்படுமாக இருந்தால் மற்றும் அப்படியான
நிலைக்கு யார்
தள்ளப்படுகிறார்கள் என்பதை அறிந்து
அவர்களை ஊக்கப்படுத்தக்கூடாது.
ஆகவே
ஒருபுறத்தில் பிரிவினைவாதம் தலைதூக்குகிறது,
மறுபுறத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய இனவாதங்கள் எழும்பியுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தை
ஆட்சிக்கு கொண்டுவர
அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்த
நிலையில் இன்று
அவர்கள் ஒரே
குழுவில் உள்ளன.
அந்த
இனவாதிகளை தோற்கடிக்கும்
வேலைத்திட்டமொன்றை செய்ய வேண்டும்.
ஆகவே சிங்களவர்கள்
அனைவரும் இது
ஒரே நாடு
என்பதை மனதிற்கொண்டு
பிரிவுபடாத தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
இனம்
என்ற ரீதியில்
பாதுகாப்பாக வாழவும் அதேபோல பொதுமக்கள் அனைவரும்
ஐக்கியம் சமாதானத்துடன்
வாழவும் தேசிய
நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் சிங்கள
மக்கள் சிந்தித்து
தீர்மானம் எடுத்தால்
எமது எதிர்பார்ப்புக்கள்
நிறைவேறும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment