செம்மண்ணோடை RDS வீதியின்
அவல நிலை!
தீர்வு காண்பது
யார்?
Sato Mansoor
கோறளைப்பற்று
மத்தி பிரதேச
செயலகப்பிரிவிலும் கோறளைப்பற்று பிரதேச
சபை பிரிவிலுமுள்ள
செம்மண்ணோடைக் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க
வீதி வடிகான்
இன்மையால் அப்பகுதி
மக்கள் பல்
வேறு சிரமங்களை
அனுபவித்து வருவதாக பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த
2010ம் ஆண்டு
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தால் இவ்வீதி
கொங்ரீட் வீதியாக
புனரமைப்புச் செய்யப்பட்ட போது, இப்பகுதி மக்கள்
தங்களுக்கு வடிகானுடன் கூடியதான வீதியை அமைத்துத்தருமாறு
கோரிய போதும்,
தற்போது வீதிக்கான
ஒதுக்கீடு மாத்திரம்
தான் வந்துள்ளதாக
இவ்வீதி கொங்ரீட்
வீதியாக போடப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய
மழை பெய்தாலும்
நீர் வழிந்தோடுவதற்குரிய
முறையில் வடிகான்கள்
இல்லாததால், நீர் வீதியில் நிற்பதால் மக்கள்
போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதேவேளை அவ்வீதியில் வீடுகள் அமைந்துள்ள காணிகளை விட கொங்ரீட் வீதி உயர்ந்து காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள வீட்டுக் காணிகளில் மழை பெய்யும் காலங்களில் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறை இல்லாததால் மழை நீர் தங்களது வளவுகளுக்குள் நின்று வற்றுவதால், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரிகள் இவ்வீதிக்கு வடிகான் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று பிரதேச செயலாளர்களே,,,இது உங்களின் கவனத்திற்கு….
,
0 comments:
Post a Comment