அமெரிக்காவில் இடம்பெற்ற

பயணிகள் ரயில் விபத்தில்

மூவர் உயிரிழந்துள்ளதுடன்

100 பேர் காயமடைந்துள்ளனர்.



இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலத்திலிருந்து பயணிகள் ரயில் தடம் புரண்டு விழுந்ததால், அந்தப் பாலத்தின் கீழாக பயணித்த வாகனங்கள் மீது ரயில் பெட்டிகள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளன.
இதன்போது, இரு லொறிகள் உட்பட ஏழு வாகனங்கள் சிக்கியுள்ளன.
குறித்த வழிதடத்தில் செல்லும் அம்ட்ராக் ரயிலின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சியேட்டலில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ரயில் 501 போர்ட்லேண்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

இந்த விபத்து டக்கோமாவின் தெற்கு பகுதியில் உள்ள வழிததடத்தில் ஏற்பட்டது. இந்த வழித்தடமானது முன்பு சரக்கு ரயில்கள் செல்ல மட்டும் உபயோகிக்கப்பட்டதாகும் .
குறித்த பயணிகள் ரயிலில் 77 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ள டுவிட்டரில்,

"இந்த விபத்தானது தனது உட்கட்டமைப்பு திட்டம் ஏன் முக்கியாமான ஒன்று என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் வீதிகள், பாலங்கள் மற்றும் ரயில்வே ஆகியவை மோசமாக உள்ள போது கடந்த காலங்களில் நாம் 7 டிரில்லியன் தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் செலவிட்டு உள்ளோம்என அதில் குறிப்பிட்டுள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top