18 சிறுமிகளுக்கு
நீதி கோரி
கொழும்பில்
கவனயீர்ப்பு போராட்டம்..!
சிறுமிகள்
விடுதிக்குள் CCTV கமரா எதற்கு !!
கொஹுவளையில்
அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ என்ற ஆதரவற்றோர்
இல்லத்தில் 18 சிறுமிகள் துஷ்பிரயோத்துக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவத்தில்,
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி, கவனயீர்ப்புப்
போராட்டமொன்று, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தின் முன்னால்
இன்று (07) காலை இடம்பெற்றது.
இங்கு
ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைத்த கூட்டறிக்கை
கொழும்பு
களுபோவிலை பீரிஸ்
வீதி, இலக்கம்
39/7A இல் இயங்கிவரும்
"தாருன் நுஸ்ரா" ஆதரவற்ற சிறுமிகளுக்கான இல்லத்தில்
வசிக்கும் 18 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதன்
அடிப்படையில், இங்கே கையெழுத்திட்டுள்ள அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாகிய
நாம், இவ்விடயம்
தொடர்பான எமது
கவலைகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திடமும்
சிறுவர் பாதுகாப்புக்குப்
பொறுப்பான அரச
அதிகார நிறுவனங்களிடமும்
முன்வைத்து இக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம்.
நுகேகொடை
மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்
இவ்வழக்கில், உரிய சட்ட-மருத்துவ அறிக்கைகளையும்
ஏனைய சான்றுகளையும்
சமர்ப்பிப்பதில் அரச அதிகார நிறுவனங்களின் பக்கத்தில்
இயல்புக்கு மாறான தாமதம் காணப்படுவதை, பாதிக்கப்பட்ட
சிறுமிகள் பாரபட்சத்துக்குள்ளாகாதபடி,
நாம் கவலையுடன்
அவதானிக்கிறோம். குறித்த இல்லத்தின் கட்டிடப்பகுதிக்குள், சிறுமிகளின் அறைகள் உள்ளிட்ட பகுதிகளில்
பொருத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் CCTV கமராக்களிலிருந்து பெறப்பட்ட
சான்றுகளும் இதில் உள்ளடங்குகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின்
சமூக-பொருளாதார
நிலையைக் கருத்திற்கொண்டு,
சிறுவர் பாதுகாப்புக்குப்
பொறுப்பான அரச
அதிகார நிறுவனங்கள்
இவ்வழக்கில் தமது முழுமையான கவனத்தைச் செலுத்துவதுடன்
வழக்கு விசாரணைகளைத்
துரிதப்படுத்துவதற்கு நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என நாம்
கோருகிறோம்.
இவ்வழக்கின்
சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமையை நாம் கவலையுடன்
அவதானிக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுமிகள், சந்தேக நபரால்
அச்சுறுத்தப்படவோ தொந்தரவுக்குள்ளாகவோ கூடும்
என நாம்
அஞ்சுகிறோம். ஆகையால், பொலிஸ், தேசிய சிறுவர்
பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன உள்ளடங்கலான பொறுப்புவாய்ந்த
அதிகார நிறுவனங்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்குமான பதுகாப்பினை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்கவேண்டும்
என நாம்
கோருகிறோம்.
தேசிய
சிறுவர் பாதுகாப்பு
அதிகாரசபை, FCID, CID, மகளிர் மற்றும்
சிறுவர்கள் பணியகம், கொஹுவலை பொலிஸ் நிலைய
குற்றப் புலனாய்வுப்
பிரிவு ஆகியன
உள்ளடங்கலான அரச அதிகார நிறுவனங்கள், இவ்வழக்குத்
தொடர்பான எந்தவொரு
நடவடிகையின்போதும், ஆதரவற்றோர் இல்லத்தில்
உள்ள பாதிக்கப்பட்ட
சிறுமிகளின் நலனைக் கருத்திலெடுக்கவேண்டும்
எனவும் கோருகின்றோம்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளைப் பாதுகாப்பதற்காகவும்
சாட்சிகள் மீதும்
பாதிக்கப்பட்டோர் மீதும் நிகழ்த்தப்படக்கூடிய
எந்தவொரு அச்சுறுத்தலையும்
தொந்தரவையும் தடுப்பதற்காகவும், புதிய முகாமைத்துவம் ஒன்றினைப்
பணிக்கமத்துவதற்கான உரிய மாற்று
ஒழுங்குகள் செய்யப்படும்வரை, தாருன் நுஸ்ரா ஆதரவற்றோருக்கான
இல்லத்தின் முகாமைத்துவத்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகாரசபை உத்தியோகபூர்வமாகப்
பொறுப்பெடுக்கவேண்டும் என நாம்
கோருகின்றோம்.
மேலும்,
இச்சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகபர் மட்டும்தான்
ஈடுபட்டுள்ளார் என்று கூற முடியாது. தாருன்
நுஸ்ரா முகாமைத்துவமும்
அரச சிறுவர்
நன்னடத்தைப்பிரிவு உத்தியோகத்தர்களும் தமது கடமையைச் செய்வதிலிருந்து தவறியிருப்பதுடன்,
இவ் இல்லத்தில்
தங்கியிருக்கும் போது சிறுமிகள் எதிர்கொண்ட மனக்காயம்தரும்
அனுபவங்களுக்கும் உடந்தையாய் இருந்துள்ளார்கள்
எனத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்த
பின்பும்கூட, அதே பழைய முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஆதரவற்றோர் இல்லத்துக்கே
இச் சிறுமிகள்
திரும்பவும் அனுப்பப்பட்டுள்ளமையானது அதிகம்
கவலையளிப்பதாய் உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுடனும் அவர்களது
பெற்றோருடனும் நீதிக்காய் ஒருமைப்பட்டு தோள்கொடுத்து நிற்கும்
நாம், சிறுவர்
நன்னடத்தைப் பிரிவு உத்தியோகத்தர்களின் இந்த மனிதாபிமானமற்ற
செயலுக்கு எமது
வன்மையான கண்டனங்களைத்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும்,
இவ் ஆதரவற்றோர்
இல்லத்தின் முகாமைத்துவத்தினதும் சிறுவர்
நன்னடத்தைப் பிரிவில் இதற்குப் பொறுப்பாயிருந்த உத்தியோகத்தர்களினதும்
கவனயீனம் தொடர்பாக
விசாரணையொன்றை நடத்தவேண்டும் எனவும், இந்நபர்கள், குற்றம்
சாட்டப்பட்டுள்ள சம்பவத்துக்கு உடந்தையாயிருந்ததாய்க்
காணப்படுமிடத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
எனவும் நாம்
கோருகிறோம்.
இங்கே
கையெழுத்திடும் அமைப்புக்களாகிய நாம், இச்சம்பவத்தை வன்மையாகக்
கண்டிப்பதுடன், இச் சிறுமியரது நல்வாழ்வுக்கான நீதியையும்
நிதி ஒதுக்கீடு
உள்ளிட்ட சமூக-பொருளாதார உதவிகளையும்
மருத்துவ, உள
ஆற்றுப்படுத்தல் உதவிகளையும் இவைபோன்ற ஏனைய உதவிகளையும்
பாதுகாப்பையும், தாருன் நுஸ்ரா இல்லத்தைச் சேர்ந்த
பாதிக்கப்பட்ட சிறுமியருக்கும் அவர்களது பெற்றோருக்கும் வழங்கவேண்டும்
எனவும் கோருகின்றோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் தொண்டர்
அடிப்படையில் சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகினர்.
இன்று 7 ஆம் திகதி இவ்வழக்கு நுகேகொட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஜனவரி 25 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment