டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றதாகும்

சேதமடைந்த நாணயத்தாள்கள்


சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாறான நாணயத் தாள்கள் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வங்கிகளினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், அவை பெறுமதியற்றவையாகி விடும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், நாணயத்தாள்களின் மீது எழுதுதல், வரைதல், முத்திரையிடல், வெட்டுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top