பாடசாலை மூன்றாம் தவணை விடுமுறை

8ஆம் திகதி ஆரம்பம்



அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகரித்துள்ள தனியார் பாடசாலைகளுக்கான இவ்வருடத்திற்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் அனைத்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரச, தனியார் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள், எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள .பொ.. சாதாரணத் தரப் பரீட்சைகள் மத்திய நிலையமாக செயற்படும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரணத் தர பரீட்சைகள் 21 ஆம் திகதி வரை நடைபெறும்.           


இந்த வருடம் நாடுபூராகவும், 5116 மத்திய நிலையங்கள் ஊடாக 688,578 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top