தங்காலையில் வங்கி கொள்ளை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

தங்காலைகுடாவெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அப்பகுதியிலுள்ள  அரச வங்கியொன்றில் புகுந்து, 50-60 இலட்சம் ரூபாயை  கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று (05) காலை 9.50 மணியளவில், மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாதோரால், தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெல்ல வங்கிக் கிளையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முழு முகத்தையும் மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த குறித்த நபர்கள், வங்கியை கொள்ளையிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் காயத்திற்குள்ளாகி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொள்ளையிடப்பட்ட பணம் தொடர்பில் இது வரை அறிவிக்கப்படாத நிலையில், தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தங்காலை பொலிசார், விசேட குழுக்கள் அமைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top