நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்
நீதிமன்ற மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம்
மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு
நிராகரிக்கப்பட்ட
வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கையின் மூலம்
நியாயத்தை பெற்றுக்கொள்ள
முடியம் தேர்தல்கள்
ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நிராகரிக்கப்பட்ட
வேட்புமனுக்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஊடகங்களுக்கு
விளக்கம் அளிக்கையிலேயே
இவ்வாறு குறிப்பிட்டார்.
21 மாவட்டங்களில்
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு என 30 அரசியல்
கட்சிகள் 447 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதுதொடர்பாக
அவர் மேலும்
தெரிவிக்கையில், வேட்புமனுக்களை பூர்த்தி செய்வதற்காக தேர்தல்கள்
ஆணைக்குழு வழிகாட்டல்களை
வழங்கியிருந்தாலும் அது சரியான
முறையில் பின்பற்றப்படவில்லை.
சிலர் சுபநேரத்தை
கருத்திற் கொண்டு
இறுதி தருவாயிலேயே
வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்கள். இதனால் பிழைகளை
திருத்தியமைக்க கால அவகாசம் கிடைக்கவில்லை என்று கூறினார்.

0 comments:
Post a Comment