இலங்கை வந்தார் மலேசியப் பிரதமர்
மலேசியப் பிரதமர்
அப்துல் நஜீப்
ரசாக் மூன்று
நாட்கள் அரசுமுறைப்
பயணமாக இன்று
காலை இலங்கையை வந்தடைந்தார். சிறப்பு
விமானம் மூலம்,
மலேசியப் பிரதமர்
இன்று காலை
8.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மலேசியப் பிரதமரை
சிலங்கா இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,
அமைச்சர் கயந்த
கருணாதிலக மற்றும்
அதிகாரிகள் வரவேற்றனர்.
மலேசியப் பிரதமருடன்,
அவரது துணைவி
டரின் சேரி
ரோஸ்மா மன்சூர்,
அனைத்துலக வர்த்தக மற்றும்
கைத்தொழில் அமைச்சர் டருக் சேரி முஸ்தபா
முகமட், சுகாதார
அமைச்சர் டருக்
சேரி சுப்பிரமணியம்,
பிரதமர் திணைக்கள
அமைச்சர் டருக்
சேரி அசலினா
ஓத்மன், சையட்,
பிரதி வெளிவிவகார
அமைச்சர் டருக்
சேரி
றீசல் மெரிக்கன், மற்றும் இந்தியா மற்றும்
தென்னாசிய உட்கட்டமைப்புக்கான
மலேசியாவின் சிறப்புத் தூதுவர் சாமிவேலு ஆகியோரும்
இலங்கைக்கு வந்துள்ளனர்.




0 comments:
Post a Comment