நாடாளுமன்ற அமர்வுகளின் போது உறங்கும்
உறுப்பினர்களுக்கு விசேட டொபி
நாடாளுமன்றில் அமர்வுகள் நடைபெறும் போது நித்திரையில் ஆழ்ந்து போகும் உறுப்பினர்களுக்கு விசேட வகையான டொபியொன்று வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்றில் அமர்வுகள் நடைபெறும் போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்கள் நடைபெறும் போது ஆழ்ந்து உறங்கி விடுகின்றனர்.
அமர்வுகள் நடைபெறும் போது நித்திரையில் ஆழ்வதனை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அமர்வுகளின் போது இவ்வாறு நித்திரையில் கொள்ளும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவும் நோக்கில், விஞ்ஞான தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன தமது அமைச்சின் அதிகாரிகளைக் கொண்டு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இனிப்பு மற்றும் வித்தியாசமான சுவையைக் கொண்ட டொபியொன்றே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டொபியை உட்கொண்டால் நித்திரையை தவிர்க்க முடியும் என பரீட்சார்த்த முயற்சிகளின் போது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமர்வுகளின் போது நித்திரைகொள்ளும் அரசியல்வாதிகளுக்கு இந்த டொபி வழங்கப்பட உள்ளதாக கொழும்பின் வார இறுதி பத்திரிகையொன்றின் அரசியல் கிசுகிசு பகுதியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:
Post a Comment