ஒலுவில் பிரதேச
கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்து
காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு
ஒலுவில்
பிரதேசத்தை அண்டியுள்ள கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததில்
நேற்று (07) காணாமல் போன மீனவரின் சடலம்
இன்று வெள்ளிக்கிழமை
(08) காலை மீட்கப்பட்டுள்ளதாக
அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடிக்கச்
சென்று கரையை
நோக்கி திரும்பிக்
கொண்டிருக்கும் வழியில் பாரிய அலையினால் அடிக்கப்பட்டு
படகு கவிழ்ந்ததில்
படகை ஓட்டிச்
சென்ற ஒலுவில்
பிரதேசத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர்
அபுசாலி முகம்மது
இப்றாஹிம் (39) காணாமல் போயிருந்தார்.
இவரை
தேடும் பணியில்
மீனவர்களும், கடற்படையினரும் நேற்று முழுவதுமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில்
ஒலுவில் வெளிச்ச
வீட்டுக்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தின் கற்பாறைக்குள்
புகுந்த நிலையில்
சடலத்தை மீட்க
முடியாத நிலையில்
காணப்படுவதாக பொலிஸாரும், மீனவர்களும் தெரிவித்தனர்.
மேற்படி
சடலத்தை அக்கரைப்பற்று
நீதவான் நிதிமன்ற
நீதிபதி பீற்றர்
போல்
சம்பவ இடத்திற்குச் இன்று (08 )சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை மீட்டதன் பின்னா் மருத்துவ
பரிசோதனையின் பொருட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லுமாறு
உறவினருக்கு கட்டளை பிறப்பித்தார்.
0 comments:
Post a Comment