சாய்ந்தமருது, மாளிகைக்காடு சார்பாக
சுயேட்சைக் குழுக்கள்.
இன்று கட்டுப்பணத்தை செலுத்தின
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை முன்னிறுத்திய சாய்ந்தமருது பிரகடணத்தின் அடிப்படையில், கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக போட்டியிடும் பொருட்டு ஒரு சுயேற்சைக் குழுவையும், காரைதீவு பிரதேச சபைத் தேர்தலில் மாளிகைக்காடு சார்பில் போட்டியிடும் பொருட்டு ஒரு சுயேற்சைக் குழுவையும் களமிறக்கும் பொருட்டு இரண்டு சுயேற்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணங்கள் இன்று 8 ஆம் திகதி (2017.12.08) – வெள்ளிக்கிழமை கட்டப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் சாய்ந்தமருது சார்பாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர். வை.எம்.ஹனீபா அவர்களாலும், மாளிகைக்காடு சார்பாக மஸ்ஜிதுல் ஸைத் பின் தாபித் பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் சாஹிர் ஹுஸைன் அவர்களாலும் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டு வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலினால் விண்ணப்பப் பத்திரங்கள் கோரப்பட்டு பலர் விண்ணப்பித்திருக்கின்ற நிலையில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் மாளிகைக்காடு பள்ளிவாசல் நிருவாகிகளின் ஆலோசனைகளுடன் ஒரு தெரிவுக்குழுவினால் மாளிகைக்காட்டின் இரண்டு வட்டாரங்களுக்காக இரண்டு முன்னணி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகரசபை தேர்தலில் சாய்ந்தமருது சுயேற்சைக் குழுவில் போட்டியிடும் முகமாக இதுவரை பலர் தங்களது விருப்பங்களைத் தெரிவித்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. சாய்ந்தமருதில் உள்ள ஆறு வட்டாரங்களுக்குமான ஆறு முன்னணி வேட்பாளர்கள் மிக விரைவில் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் நியமனப் பத்திரங்களை எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகம் செய்து வருகின்றது என அறிவிக்கப்படுகின்றது.
குறித்த வேட்பாளர் தெரிவிற்கென, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் மிக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது, இஸ்லாமிய மார்க்க விழுமியங்களைப் பின்பற்றி நடப்பவர் மற்றும் தலைமைத்துவ கட்டுப்பாட்டை மீறாதவர் போன்ற பல பொது நிபந்தனைகளையும், வரையறைகளையும் விதித்து வேட்பாளர் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில்
முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளைபெற்று 11 ஆசனங்களையும்
இலங்கை தமிழரசுக் கட்சி 9,911 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு 8,524 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும்
ஐக்கிய தேசியக் கட்சி 2,805 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
சாய்ந்தமருது வாக்காளர்களே நீங்கள் கல்முனை மாநகர சபையின் எத்தனையாவது வட்டாரத்திற்குள் இருக்கின்றீகள் என்பதை அறிவீர்களா?
உள்ளூராட்சி தேர்தலில் எதிர்காலத்தில் சாய்ந்தமருது கல்முனை மாநகர சபையின் வட்டாரம் – 18, வட்டாரம் – 19, வட்டாரம் – 20, வட்டாரம் – 21, வட்டாரம் – 22, வட்டாரம் – 23 என்றே அழைக்கப்படும். சாய்ந்தமருது என்ற பெயர் அங்கிருக்காது
கல்முனை மாநகர சபை 23 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரங்களிலிருந்து 24 உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படல் வேண்டும். இதில் தனி உறுப்பினர் வட்டாரங்களின் எண்ணிக்கை 22 ஆகும். பல உறுப்பினர் எண்ணிக்கை 1 ஆகும். 12 ஆம் வட்டாரத்திலிருந்து மாத்திரம் 2 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
வட்டார இலக்கம்
|
உள்ளடக்கப்படும் பகுதிகள்
|
வட்டாரம் 18
|
சாய்ந்தமருது 03 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 01 கிராம அலுவலர் பிரிவு
|
வட்டாரம் 19
|
சாய்ந்தமருது 04 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 06 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 02 கிராம அலுவலர் பிரிவு
|
வட்டாரம் 20
|
சாய்ந்தமருது 12 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 08 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 10 கிராம அலுவலர் பிரிவு
|
வட்டாரம் 21
|
சாய்ந்தமருது 09 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 07 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 05 கிராம அலுவலர் பிரிவு
|
வட்டாரம் 22
|
சாய்ந்தமருது 11 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 13 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 15 கிராம அலுவலர் பிரிவு
|
வட்டாரம் 23
|
சாய்ந்தமருது 17 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 16 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 14 கிராம அலுவலர் பிரிவு
|
0 comments:
Post a Comment