அமைச்சர் ரிஷாட் குறித்து மட்டமாக எழுதி வந்த
பல்கலைகழக மாணவர் ஒருவரின் தெளிவான கருத்து
நான்
பல்கலைகழகம் ஒன்றின் அரசியல்துறையில் கல்வி கற்கும்
கிழக்கு மாகாணத்தை
சேர்ந்த மாணவண்.
எனது
முழு குடும்பமும்
ஶ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸை ஆதரிப்பவர்கள்.
நானும்
சில மாதங்களுக்கு
முன்பு வரை
முஸ்லிம் காங்கிரஸ்
ஆதரவாளனாகவே இருந்தேன்.
அந்நேரம்
எனது கட்சியின்
செயல்பாடுகளை,அபிவிருத்திகளை எழுதுவதற்கு
பதிலாக அமைச்சர்
ரிசாத்தையும் அவர் சார்ந்தோரையும் மட்டமாக எழுதுவதில்
தான் அதிக
நேரம் கடத்தினேன்.
இதற்கான
ஊடகங்கள் எனக்கு
அந்த கட்சிக்குள்
நிறையவே கிடைத்தது.
இன்று
அல்லாஹ் எனது
அறிவு கண்ணை
திறந்துள்ளான். இப்போது எனது மனதில் ஹக்கீமை
விட ரிஷாத்
உயர்ந்து நிற்கிறார்.
நான்
அமைச்சர் ரிஷாத்
மீது முக்கியமாக
மூன்று விடயங்களில்
தான் முரண்பட்டேன்
அதற்கான தெளிவை
இன்று பெற்றுள்ளேன்.
தப்பெண்ணம்
01).
இடம்
கொடுத்த கட்சிக்கு
எதிராய் இன்னொரு
கட்சி ஆரம்பித்தல்.
பெருந்தலைவர்
அஷ்ரப் காலத்தில்
இருந்து முஸ்லிம்
காங்கிரஸில் இருந்து பிரிந்த பலர் செல்லாகாசுகளாய்
ஆன போது
28 வயது இளைஞர்
ஒருவர் கட்சி
ஆரம்பித்து இன்று குறுகிய காலத்திற்குள் ஐந்து
பாராளுமன்ற உறுப்பினர்களோடு இருக்கிறார்
எனில் அது
அவரின் திறமையும்
ஆளுமையும் ஆகும்.
அதுவும்
அமைச்சர் ரிசாத்
கட்சி ஆரம்பிக்க
காரணமே முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
தான் . முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்
அப்போது முஸ்லிம்
காங்கிரஸை பிரதிநிதித்துவம்
செய்த முன்னாள்
அமைச்சர் அதாவுல்லா
, மர்ஹூம் நூர்தீன்
மஷுர் ஆகியோரும்
2002 ல் விடுதலைப்புலிகளோடு
சமாதான பேச்சுவார்த்தை
நடத்தினார்கள். இதிலே இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள்
தொடர்பில் ரவூப்
ஹக்கீம் கையாண்ட
அசமந்த போக்குகள்
தொடர்பில் அதே
கட்சிக்குள் இருந்த அமைச்சர் ரிசாத் கேள்வி
எழுப்பினார். இதை வைத்தே அமைச்சர் ஹக்கீம்
அவர்கள் அமைச்சர்
ரிசாத்தை வெளியேற்றினார்
அதற்கு காரணமாக
குமாரி விடயத்தை
மக்களுக்கு காட்டினார்கள்.
அன்று
சமாதான பேச்சுவார்த்தையில்
நடந்த கோளாறுகளை
அமைச்சர் ரிஷாத்
சொன்ன போது
மறுத்தவர்கள் இன்று மேடை போட்டு கூறுகிறார்கள்.
அதிலே பணம்
பரிமாறப்பட்டதாக கூட குற்றச்சாட்டுக்கள் வருகிறது.
அதோடு
ஒரு கட்சியில்
இருந்து வெளியாகி
இன்னொரு கட்சி
ஆரம்பிப்பது என்பது பாரிய ஒரு விடயமல்ல.
D.S. சேனநாயக்கவுடன் இணைந்து ஐக்கிய
தேசிய கட்சியில்
அரசியல் செய்த
S.W.R.D பண்டாரநாயக்க பின்பு அதிலிருந்து
பிரிந்து சுதந்திர
கட்சியை நிறுவினார்.
ஆக
எனது முதல்
தப்பெண்ணம் இல்லாது போனது.
தப்பெண்ணம்
02).
குமாரி
விடயத்தை பெரிதாக்கியவர்
குமாரி
ஹக்கீம் காதல்
விடயத்திற்கும் அமைச்சர் ரிசாத் அவர்களுக்கும் தொடர்பு
எதுவும் இல்லை.
அமைச்சர்
ரிசாத் முஸ்லிம்
காங்கிரஸிற்குள் செல்ல முன்பே இருந்த பிரச்சினை
இதுவாகும்.
துரதிஷ்டவசமாக
அமைச்சர் ரிசாத்
, பிரதி அமைச்சர்
அமீர் அலி
, நஜீப் ஏ
மஜீத் ஆகியோர்
ஓரிடத்தில் இருந்து வெளியாகிய நேரம் குமாரி
குரே அவளுக்கு
நடந்த அநீதியை
இவர்களிடம் தெரிவித்துள்ளாள்.
இதனை
சில ஊடகங்களும்
, முஸ்லிம் காங்கிரஸூக்குள் இருந்த சிலரும் இது
அனைத்தும் அமைச்சர்
ரிஷாத்தின் சதி என்று மக்களுக்கு காட்டினார்கள்.
இதன் மூலம்
அவர்கள் இரண்டு
விடயத்தை செய்து
கொண்டார்கள்
ஒன்று
அவர்களின் தலைவர்
குற்றமற்றவர் என்று காட்டியது.
அடுத்து
ஏற்கனவே இடம்பெயர்ந்த
மக்கள் விடயத்தில்
குரல் எழுப்பிய
அமைச்சர் ரிசாத்தை
வெளியேற்றியது.
இவைகளின்
உண்மை தன்மைகள்
இன்று வெளியாகி
உள்ளது. அந்த
கட்சிக்குள் உள்ளவர்களே குமாரி விடயத்தை படம்
பிடித்தவர் யார் அதனை அம்பலப்படுத்தியது யார் என்றெல்லாம் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள்.
இதன்
மூலம் எனது
இரண்டாவது தப்பெண்ணமும்
மறைந்தது.
தப்பெண்ணம்
03).
ரிஷாத்
ஊழல்வாதி
அமைச்சர்
ரிஷாத் ஊழல்
செய்கிறார் , வில்பத்துவில் காணி பிடித்துள்ளார் என்றெல்லாம்
குற்றச்சாட்டுக்கள் வந்தது.
கடந்த
பொது தேர்தலில்
கூட மன்னாரை
சேர்ந்த குவைதிர்கான்
, குருநாகலை சேர்ந்த ரிஷ்வி ஆகியோர் மூலம்
பல குற்றச்சாட்டுக்கள்
முன் வைக்கப்பட்டு
அமைச்சர் ரிஷாத்
அவர்களை விசாரணைக்கு
அழைத்தும் கூட
அவரை குற்றவாளி
என்று நிரூபிக்கப்படவில்லை
வில்பத்துவிலும்
ஊழல் செய்து
ரிசாத் நாடகமாடுகிறார்
அங்கு மக்களுக்கு
ஒரு பிரச்சினையுமில்லை
என்றார்கள். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் பின்
இது அமைச்சர்
ரிசாத்தின் பிரச்சினை இல்லை மக்களின் பிரச்சினை
தான் என்பதை
நாட்டின் முழு
முஸ்லிம்களும் அறிந்துள்ளனர்.
ஆரம்பத்தில்
நாடகம் என்றவர்களும்
மக்களை திருப்திபடுத்தும்
நோக்கில் தற்போது
தீர்வு என்ற
கோதாவில் குதித்துள்ளார்கள்.
இதிலிருந்து
அவர் மீதிருந்த
மூன்றாவது தப்பெண்ணமும்
நீங்கியது.
இப்படி
எனக்கிருந்த தப்பெண்ணங்கள் நீங்கி இந்த நாட்டின்
முழு முஸ்லிம்களுக்கும்
தகுதியான தலைவராக
எனது மனதில்
அமைச்சர் ரிசாத்
இன்று உட்கார்ந்துள்ளார்.
17 "வருடமாக தலைவராக இருந்தும் சவூதி
கட்டிய வீட்டை
பற்றி பேசியும்
, மாயக்கல்லியில் வைக்கும் சிலை பற்றி பேசியும்
, வில்பத்துவை பற்றி பேசியும் , தம்புள்ளை பள்ளி
விடயம் பற்றி
ஞானசார தேரர்
பற்றி பேசியும்
தீர்வு காண
முயன்றால் கண்டியில்
கிடைக்கும் சிங்கள வாக்குகள் கிடைக்காமல் போகும்
என்று நினைப்பவர்கள்
எங்கே ? சமூகம்
சமூகம் என்று
ஓடும் ரிசாத்
எங்கே ?
அன்று
சமாதான பேச்சு
வார்த்தையின் போதும் , தேர்தல்களின் போதும் கோடிகள்
பரிமாறப்பட்டதாகவும் அவற்றை அனைவரும்
பங்கு போட்டதாகவும்
அவர்களின் கட்சியினரே
கூறுகிறார்களே இதன் பாரத்தூரம் தான் என்ன
? உரிமை என்ற
பெயரில் நமது
சமூகம் அடமானம்
வைக்கப்பட்டுள்ளது.
ஆக
, எதிர்வரும் உள்ளுறாட்சி மன்ற தேர்தலில் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸை வெற்றி
வாகை சூட
வைக்க வேண்டும்.
அப்போது தான்
நமக்கும் அபிவிருத்திகளும்
,வேலை வாய்ப்புக்களும்
, வீட்டுத்திட்டங்களும், பொருளாதார அபிவிருத்திகளும்
வந்து சேரும்.
இதில்லாமல்
காலம் பூராக
பாடல்களில் மயங்கி, தூய்மையற்றவர்களுக்கு
நாரே தக்பீர்
கோஷம் போட்டுக்கொண்டே
இருப்போமெனில் நமது தலை எழுத்தை யாராலும்
மாற்ற முடியாது.
ஆக
எனக்கு போன்றே
உங்களுக்கும் தப்பான அபிப்ராயங்கள் இருக்கலாம் நடு
நிலையாய் யோசியுங்கள்
அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
சிந்தித்து செயல்படுவோமாக
.
(அஹ்மத்
லெப்பை இர்ஷாத்
, சம்மாந்துறை)
0 comments:
Post a Comment