வாயைப் பொத்துடா ..! ராஸ்கல்..!! ஹறாமி..! ஹறாமி..!!!

மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்கள்

செருப்பால் அடிப்பதற்கும் முயற்சி

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் முன்னிலையில் சம்பவம்



மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வாயைப் பொத்துடா ..! ராஸ்கல்..!! ஹறாமி..! ஹறாமி..!!! என்று மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை பாசிக்குடா ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் வூப் ஹக்கீம் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
ச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வூப் ஹக்கீமை சந்திப்பபதற்காக தனது மகன், கட்சி முக்கியதர் நஸீர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருடன் பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலொன்றுக்கு, நேற்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் சென்றிருந்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்டும் அங்கு வருகை தர, மாவட்ட அரசியல் விடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினர்.
இதன்போது, அலிசாஹிர் மௌலானாவுடன் வந்திருந்த கட்சி முக்கியஸ்தரான நசீர் என்பவர்; “ஏறாவூர் விடயங்கள் குறித்துப் பேசுவோம்என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, “எனது அறைக்குள் சென்று பேசுவோம் வாருங்கள்என்று ஹக்கீம் அழைக்க, அனைவரும்அறைக்குள் சென்றுள்ளனர்.

அதற்கு முனனர், ஏறாவூர் நகரசபைத் தேர்தலில் வேட்பாளர் நியமிக்கும் விடயமாக முஸ்லிம் காங்கிரஸ், அலிசாஹிர் மௌலானாவிடம் கேட்ட போது; “ஹாபிஸ் நசீரும், நானும் இணைந்து இணக்கப்பாட்டுடன் வேட்பாளர்களை நியமிப்போம்என, மொலானா கூறியுள்ளார்.
ஹக்கீமுடைய ஹோட்டல் அறைக்கு அனைவரும் சென்ற போது; “ஏறாவூர் விடயமாக பேசுவதாக இருந்தால், அங்கு அலிசாஹிர் மௌலானா தவிர வேறு யாரும், இருக்கக்கூடாது என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் ஹாபிஸ் நசீர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அலிசாஹிர் மௌலானாவின் மகன் மற்றும் கட்சி முக்கியஸ்தர் நசீர் ஆகியோர் அறையிலிருந்து வெளியேறி, அருகிலிருந்த கண்ணாடி அறையினுள் இருந்துள்ளனர்.
இதன்போது  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அலிசாஹிர் மௌலானா, ஹாபிஸ் நசீர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஆகியோர் மட்டுமே, அந்த அறையில் இருந்துள்ளனர்.
சில நிமிடங்கள் கடந்திருக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அறையினுள் உயர்ந்த குரலில் சத்தம் கேட்டது. வெளியிலிருந்த நஸீர் மற்றும் மௌலானாவின் மகன் ஆகியோருடன் மேலும் பலர் அந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தனர்.

முன்னாள் முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அலிசாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இறுகப் பிடித்துக்கொண்டிருக்க, ஹாபிஸ் நசீர் அகமட், மௌலானாவை பார்த்துவாயைப் பொத்துடா  ராஸ்கல், ஹறாமி, நீ ஒரு றாமிடா, றாமிடாஎன்று  சத்தமிட்டுக் கத்திக் கொண்டு, தனது செருப்பை கழட்டி அடிப்பதற்கு முயற்சித்துள்ளார். என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top