நாட்டில் 10162 அரச பாடசாலைகளில்
2,32,555
ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்
கல்வி அமைச்சின் புள்ளிவிபரம் தெரிவிப்பு
எமது
இலங்கை நாட்டில்
10162 அரச
பாடசாலைகளில் மொத்தமாக 2 இலட்சத்து 32 ஆயிரத்து 555 ஆசிரியர்கள்
மாணவர்களின் கல்வி போதனைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் புள்ளி விபரம்
தெரிவிக்கின்றது.
மொத்த
ஆசிரியர்களில் 99ஆயிரத்து 724 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும்
1 இலட்சத்து 27 ஆயிரத்து 857
பேர் பயிற்றப்பட ஆசிரியர்களாகவும்
2 ஆயிரத்து 426 பேர்
பயிற்சியற்ற ஆசிரியர்களாகவும் ஆயிரது 887பேர் பயிலுநர்
ஆசிரியர்களாகவும் 661 பேர் ஏனைய ஆசிரியர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
அரச பாடசாலைகளில் 353 தேசியப் பாடசாலைகளும் 9809 மாகாண பாடசாலைகளும்
அடங்குகின்றன. இப்பாடசாலைகளில் 1AB பாடசாலைகளாக 1016 பாடசாலைகளும் 1C பாடசாலைகளாக 1805 பாடசாலைகளும் Type
2 பாடசாலைகளாக 3408 பாடசாலைகளும் Type 3 பாடசாலைகளாக 3933 பாடசாலைகளும்
உள்ளன.
இப்பாடசாலைகளில் சிங்கள மொழிமூலம்
கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக 6338 பாடசாலைகளும் தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக
2989 பாடசாலைகளும் சிங்கள மொழி மூலமும் தமிழ் மொழி மூலமும் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக 66 பாடசாலைகளும் சிங்கள மொழி மூலமும் ஆங்கில மொழி
மூலமும் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக 554 பாடசாலைகளும் தமிழ்
மொழி மூலமும் ஆங்கில மொழி மூலமும் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக 168
பாடசாலைகளும் சிங்கள மொழி மூலமும் தமிழ் மொழி மூலமும் ஆங்கில மொழி மூலமும் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக 47 பாடசாலைகளும் உள்ளன.
27 பாடசாலைகள் ஒரு ஆசிரியருடனும் 108 பாடசாலைகள் 2 ஆசிரியர்களுடனும்
3013 பாடசாலகள் 3 தொடக்கம் 9 ஆசிரியர்களுடனும் 4373 பாடசாலைகள் 10 தொடக்கம் 25 ஆசிரியர்களுடனும்
1748 பாடசாலைகள் 26 தொடக்கம் 50 ஆசிரியர்களுடனும் 669 பாடசாலைகள் 51 தொடக்கம் 100 ஆசிரியர்களுடனும்
224 பாடசாலைகள் 101 தொடக்கம் அந்த எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் இயங்குகின்றன.
மொத்தமாக 4,143,330 மாணவர்கள் இப்பாடசாலைகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இம்மாணவர்களில் 2,052,188 பேர் ஆண்கள், 2,091,142 பேர் பெண்களாவர்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment