கல்முனை மாநகர சபையின் மேயராக

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார்

மாநகர சபைக்கான புதி கட்டடத்தை

200 மில்லியன் ரூபா செலவில்

சாய்ந்தமருது வாசிகசாலையில் அமைக்கவும் திட்டம்

சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட மற்றும் ஒரு வாக்குறுதி

சாய்ந்தமருது மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மேலும் ஒரு வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.
கல்முனை மாநகர சபையின் மேயராக  சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவரையே நியமிக்கப் போவதாக அவர் வாக்குறுதி வழங்கியிருக்கிறார்.
சாய்ந்தமருதில் இன்று 3 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே கட்சியின் தலைவர் ஹக்கீம் இந்த வாக்குறுதியை வழங்கினார்.
சாய்ந்தமருதுக்கு மேயர் பதவியை வழங்கும் எனது முடிவுக்கு யாரும் தடையாக இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருதில் மேயருக்கு தகுதியானவர்கள் எவரும் கட்சியினால் வேட்பாளர்களாக நியமிக்கப்படாத நிலையில் பிரதேசத்தின் கெளரவம், முன்னேற்றம் எதையும் கருத்தில் கொள்ளாது வாக்குப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தை மட்டும் கருத்தில் கொண்டு கட்சியின் தலைவர் ஹக்கீம் இப்படி ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளார் என மக்கள் இவரின் இந்த வாக்குறுதிக்கு அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஹக்கீம் இக்கூட்டத்தில் இது குறித்து பேசியதாவது,
சாய்ந்தமருது மக்களின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டிய விருப்பம், புறந்தள்ள முடியாத விருப்பம். இந்த பூதாகரமாக வந்துள்ள விருப்பத்திற்கு எவருக்கும் பாதகமில்லாமல் ஒரு தீர்வைக் கொடுக்கின்ற நிலவரத்தைக் கொண்டு வரும்வரை பொறுத்திருக்க வேண்டும்.
இந்தக் கட்சி இந்த மண்ணுக்கு மேயர் பதவியைக் கொடுத்து அலங்கரிக்கும். சாய்ந்தமருதுக்கு தனியான ஒரு பிரதேச சபை கிடைக்கும் வரை அந்த மேயர் பதவி தொடரும். இதனை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு பரிகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்றால் அதனையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். அதற்கு முன்னதாக கல்முனை மாநகரத்தின் பெயரை கல்முனை – சாய்ந்தமருது மாநகரம் எனப் பெயரை மாற்றுவோம். கல்முனை – சாய்ந்தமருது மாநகர சபைக்கான கட்டடத்தை 200 மில்லியன் ரூபா செலவில் சாய்ந்தமருது வாசிகசாலையில் அமைக்கத்திட்டமிட்டுள்ளோம். இதனை இந்த வருடமே ஆரம்பிப்போம். சாய்ந்தமருது தோணாவைச் சுற்றி பூங்காவை அமைக்கத் ஆரம்பித்துள்ளோம்.
இந்த தேர்தல் முடிந்த கையோடு கல்முனைப் பிரதேசம் எங்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். எது எப்படியிருப்பினும் கல்முனை மாநகரின் தலைமைப் பதவி இந்த மண்ணில்தான் இருக்கும் இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது மக்களாகிய நீங்கள்

ஏ.எல்.ஜுனைதீன்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top