தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட


உத்தியோகத்தர்களுக்கான

கொடுப்பனவு விபரம் வெளியீடு

கடந்த 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிரூபத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் நியமனத்தைப் பெற்று தேர்தல் கடமையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பனவு விபரம் வருமாறு:
வலய மற்றும் வட்டார உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 4000 ரூபாசிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3750ரூபாமேலதிக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250 ரூபாவிசேட கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2250 ரூபாகனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் அல்லது எழுதுனருக்கு 2000 ரூபாஅலுவலக கனிஸ்ட ஊழியருக்கு 1750 ரூபாவும் வழங்கப்படும்.
வாக்கெண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பனவு விபரம் வருமாறு:
தலைமை வாக்கெண்ணும் அலுவலர்உதவி தெரிவத்தாட்சி மற்றும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4500 ரூபாவாக்கெண்ணும் அலுவலர் அல்லது சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4350 ரூபாவாக்கெண்ணும் மேற்பார்வை வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கு 4350 ரூபாமேலதிக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3000 ரூபாகனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2500 ரூபாகனிஸ்ட ஊழியருக்கு 1500 ரூபாவும் வழங்கப்படும்.
பிரதேச செயலக மட்டத்தில் தாபிக்கப்பட்ட பிரதேச இணைப்பு அலுவலக கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு விபரம்:

பிரதேச இணைப்பு அலுவலர்உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 4000 ரூபாசிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250ரூபாகனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 2500 ரூபாகனிஸ்ட ஊழியருக்கு 1500ரூபாவும் வழங்கப்படும்.
மேலதிக படியாக முறையே 2250 ரூபா, 2000 ரூபா, 1250 ரூபா மற்றும் 750 ரூபா வழங்கப்படும். இதேவேளை வாக்குப்பெட்டிகளைஆவணங்களை கையளித்தலும் ஏற்றலும் கடமைக்கான கொடுப்பனவு விபரம்:
கையளித்தலுக்கு :
உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 1500ரூபாசிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 1250ரூபாகனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 900 ரூபாஅலுவலக ஊழியருக்கு 800ரூபாவும் வழங்கப்படும்.
ஏற்றலுக்கு :
உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 2500ரூபாசிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2000ரூபாகனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 1500ரூபாஅலுவலக ஊழியருக்கு 1200ரூபாவும் வழங்கப்படும்.
அனைத்துக் கொடுப்பனவுகளும் எதிர்வரும் 30.04.2018 இற்கு முன் செலுத்தப்படல் வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரத்னாயக்க சம்பந்தப்பட்ட சகலருக்கும் சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top