“சாய்ந்தமருது” பெயரை உள்ளடக்கியதாக
வட்டாரங்கள் பெயரிடப்படல் வேண்டும்
மக்கள் கோரிக்கை
கல்முனை மாநகர சபை பிரிவுக்குள் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதுக்குள் அடங்கும் 6 வட்டாரங்களையும் “சாய்ந்தமருது” பெயரை உள்ளடக்கியதாக வட்டாரங்கள் பெயரிடப்படல் வேண்டும் என சாய்ந்தமருது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்பொழுது சாய்ந்தமருதில் உள்ள 6 வட்டாரங்களும் சாய்ந்தமருது என்ற அடையாளம் நீக்கப்பட்டு கல்முனை 18, கல்முனை 19, கல்முனை 20, கல்முனை 21, கல்முனை 22, கல்முனை 23 எனப் பெயரிடப்பட்டு 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது சாய்ந்தமருது மக்களின் விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு என இங்குள்ள மக்கள் தெரிவித்திருப்பதுடன் சாய்ந்தமருதிலுள்ள இந்த வட்டாரங்கள் “சாய்ந்தமருது” பெயரை உள்ளடக்கியதாக பெயரிடப்படல் வேண்டும் என்றே கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபைக் கோரிக்கைக்கு ஆதரவாக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தக் கோரிக்கையை முன் வைத்து சாய்ந்தமருதில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டவர்களுக்கு இங்குள்ள மக்கள் 13,239 வாக்குகளை அளித்து அமோக ஆதரவுடன் 6 வட்டாரங்களிலும் வெற்றியடையச் செய்துள்ளார்கள்.
அதுமாத்திரமல்லாமல் கல்முனை மாநகர சபையில் இரண்டாவது அதிகூடிய 9 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவாக இவர்களைத் தெரிவு செய்து சாய்ந்தமருது மக்கள் மீது நாட்டு மக்களின் பார்வையைச் செலுத்துவதற்கு ஒற்றுமையாகச் செயல்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment