சாய்ந்தமருது மக்களுக்கு துரோகம் செய்தவர்கள்

மாண்புறும் சாய்ந்தமருது என

எப்படி கொண்டாட முடியும்?

மக்கள் கேள்வி!
  
பெப்ரவரி 04 ஆம் திகதி இடம்பெறும் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் பெறுமதியுடைய நாணயத்தாளில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் படம் பொறிக்கப்பட்டுள்ளதை சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்த சில அரசியல்வாதிகள் மாண்புறும் சாய்ந்தமருது என  அதனை அழைப்பிதழ்களில் அச்சடித்து அதன் மூலம் அரசியல் நடத்த முன் வந்திருப்பது ஒரு வெட்கக் கேடான விடயம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருது மக்கள் ஒன்றுபட்டு விமர்சையாக சுதந்திர தினத்தில் இதைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு முன்னர் எப்படி சாய்ந்தமருது மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் மாண்புறும் சாய்ந்தமருது என  கொண்டாடமுடியும் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமைக்கு விரோதமாக இருந்து செயல்பட்டவர்கள்  சாய்ந்தமருது மக்களின் மாண்பை கொண்டாட முற்பட்டிருப்பது ஆச்சிரியமான விடயமாக இருப்பதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு மாண்புறும் சாய்ந்தமருது என்ற பெயரிட்டு கொண்டாடுவதே முறையாகும். அதைவிடுத்து சாய்ந்தமருதுக்கு கிடைத்துள்ள கெளரவத்தை தங்கள் அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்த முன்வந்திருப்பது மக்களை ஏமாற்றும் ஒரு வெட்கம் கெட்ட நடவடிக்கையாகும் எனவும் சாய்ந்தமருது மக்கள் குறிப்பிடுகின்றனர். 




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top