ஐ.தே.கட்சியின் புதிய எம்.பியாக ஏ.எல்.எம்.நஸீர்
ஐ.தே.கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக
முன்னாள் கிழக்குமாகாண
அமைச்சர் ஏ.எல்.எம்.
நஸீர் நேற்றுக்
காலை சபாநாயகர்
முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்றம்
நேற்றுக் காலை
10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. சபாநாயகரின்
அறிவிப்புகளை அடுத்து புதிய எம்.பி பதவிப் பிரமாணம்
செய்து கொண்டார்.
புதிய
எம்.பிக்கு
சபாநாயகர் வாழ்த்து
தெரிவித்ததோடு அவருக்கு பிரதமர், அமைச்சர் ரவூப்
ஹக்கீம் மற்றும்
ஆளும் எதிர்ப்புத்
தரப்பு எம்.பிகள் பலரும்
வாழ்த்துத் தெரிவித்தார்கள். கடந்த மாதம் எம்.எச்.எம்.சல்மான் எம்.பி பதவியை
ராஜினாமா செய்தார்.
அந்த இடத்துக்கு
முன்னாள் மாகாண அமைச்சர் நஸீரின்
பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இவரின்
அரசியல் பிரவசம்
முதலில் 2011.03.25ம் திகதி
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகவும் அதன்
பின்னர் கிழக்கு
மாகாண சபை
உறுப்பினராகவும் அதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சராகவுமிருந்துள்ளார்.
எஸ்.எல். அஹமட்லெப்பை,
ஐ.எல்.சுபையிதா உம்மா
தம்பதிகளின் 4வது புதல்வரான இவர் 1972.05.15ம்
திகதி அட்டாளைச்சேனை
மண்ணில் பிறந்தார்.ஆரம்பக் கல்வியை
அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் ஆரம்பித்து தனது க.பொ.த.சாதாரண
தரக் கல்வியை
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் பயின்றார்.
1989.09.12 இல் இலங்கை
பொலிஸ் சேவையில்
இணைந்து கொண்டு
சேவையாற்றிய இவர் 1990.06.11இல் விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு 11நாட்கள் சிறை பிடிக்கப்பட்டு
அங்கிருந்து தப்பி வந்தார்.
அக்காலத்தில்
விடுதலைப்புலிகளால் தேடப்பட்டு வந்த
இவர் 1995இல்
பாதுகாப்பு மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்குச்
சென்றார்.பின்னர்
நாட்டின் அசாதாரண
சூழ்நிலை இருந்த
போது மீண்டும்
2011ம் ஆண்டு
தாய்நாட்டுக்கு வருகைதந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
இவர்
அக்கரைப்பற்றைச் சேர்ந்த சித்தி நஜீமாவை கரம்பற்றி
மூன்று குழந்தைகளின்
தந்தையாவார்.
0 comments:
Post a Comment